October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தயாரிப்பாளர் கவிதாவின் வளர்ச்சி எல்லாப் பெண்களையும் ஊக்குவிக்கும் – நடிகர் தியாகராஜன்

by by Mar 9, 2025 0

ராபர் இசை வெளியீடு செய்தி.

பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது :

முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது:

எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி…

Read More

விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !

by by Mar 9, 2025 0

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது.

15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்த படம், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப்…

Read More

லெக் பீஸ் திரைப்பட விமர்சனம்

by by Mar 8, 2025 0

இந்தப் படத்தைத் தயாரித்த மணிகண்டனுக்கும் சரி… இயக்கிய ஸ்ரீநாத்துக்கும் சரி… ஒரே குறிக்கோள்தான். பணம் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களை “போதும்… போதும்…” என்கிற அளவில் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் அது.

அதற்காகவே இருவரும் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். அதிலும் “நான்தான் தயாரிப்பாளர். எனக்குத்தான் முக்கியத்துவம் வேண்டும்…” என்று மணிகண்டனோ அல்லது “நான்தான் இயக்குனர் எனக்கே முக்கியத்துவம்..!” என்று ஸ்ரீநாத்தோ கேட்காமல் கதையின் முக்கிய நான்கு பாத்திரங்களில் தங்களது பகுதியை 1/4 என்ற விகிதத்தில் பங்கு…

Read More

ஜென்டில்வுமன் திரைப்பட விமர்சனம்

by by Mar 7, 2025 0

“உங்கள் கணவர் இன்னும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவரை என்ன செய்வீர்கள்..?” என்று இந்தியப் பெண்களிடம் கேட்டால் அதிகபட்சம் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்..?

“அவரைப் பிரிந்து விடுவேன்..!” என்பதாகத்தான் இருக்கும் அல்லவா..? ஆனால், அப்படி வாழும் தன் கணவர் (நாயகன்) ஹரி கிருஷ்ணனை அவரது மனைவி (நாயகி) லிஜோமோள் ஜோஸ் என்ன செய்கிறார் தெரியுமா..? அதுதான் கதை.

திருமணம் ஆகி 3 மாதத்தில்… கணவன் தன்னிடம் காதலுடன் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு…

Read More

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!

by by Mar 7, 2025 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாகத் துவங்கியது !

1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட பூஜை !

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல்…

Read More

மர்மர் திரைப்பட விமர்சனம்

by by Mar 7, 2025 0

தமிழ் சினிமாவில் அரிதாக புதிய முயற்சிகள் வருவதுண்டு. அந்த வகையில் ஃபவுண்டட் ஃபுட்டேஜ் என்ற முறையில் கிடைத்த படப்பிடிப்பை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தைத் தந்ததாக அறிவித்துவிட்டு திரைக்கு வந்திருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர். 

சொன்னது சொன்னபடி இருக்க வேண்டுமே என்கிற கவனத்துடன் படத்தை இயக்கியிருக்கிறார் ஹேம்நாத் நாராயணன். 

இது சோஷியல் மீடியா யுகம் என்பதால், ட்ராவல்,  ஃபுட்டி வீடியோக்களைப் போன்று ஆபத்தான பகுதிகளுக்கு சென்று உண்மை நிலையை கண்டறியும் அடவெஞ்ச்சர் வீடியோக்களும் பரபரப்பாக இருக்கின்றன. 

அந்த வகையில் இரண்டு…

Read More

நிறம் மாறும் உலகில் திரைப்பட விமர்சனம்

by by Mar 7, 2025 0

இருக்கிற இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதையை உருப்படியாக சொல்லி முடிப்பதே பெரிய விஷயம் என்று இருக்க, அதற்குள்  ஐந்து கதைகளைத் திணித்து அந்தாலஜியாகத் தந்திருக்கிறார் இந்தப் பட இயக்குநர் பிரிட்டோ ஜே.பி.

தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் வைத்து தன் காதலனை மரியாதைக் குறைவாக நடத்திய அம்மாவிடம் கோபித்துக் கொண்டு ரயில் ஏறுகிறார் நாயகி லவ்லின்.

ரயிலில் அவரின் நிலையைப் பேச்சுக் கொடுத்து புரிந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு இந்த உலகில் உறவுகள் எப்படி எல்லாம்…

Read More

எமகாதகி திரைப்பட விமர்சனம்

by by Mar 6, 2025 0

எவருக்கும் அடங்காமல் நினைத்ததை வைராக்கியத்துடன் முடிப்பவரை எமகாதகன் என்பார்கள். அதன் பெண்பால் வடிவம்தான் இது. அப்படி, இறந்தும் தன் வைராக்கியத்தை முடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது.

கதையின் நாயகியாக வரும் ரூபா கொடுவாயூர் எப்படிப்பட்ட பிடிவாதக்காரர் என்பதை முதல் காட்சியிலேயே நமக்கு தெரியப்படுத்தி வருகிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். அத்துடன் அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருப்பதும் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. 

அப்பா ராஜு ராஜப்பன் அம்மா கீதா கைலாசம் அண்ணன் சுபாஷ் ராமசாமி, அண்ணி ஹரிதா…

Read More

சிவாஜி வீட்டைக் காப்பாற்றுங்கள் – கே ராஜன் வேண்டுகோள்

by by Mar 5, 2025 0

ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ் .எம் .புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்.

அருண் T சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை -கிரண் ஜோஸ், எடிட்டர் -ஆல்வின் டாமி,பாடல்கள் – ரஃபீக் அஹமத்,விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா, பாடகர்கள் ஹரிச்சரன்,…

Read More

கூரன் திரைப்பட விமர்சனம்

by by Mar 2, 2025 0

முன்பெல்லாம் நாய்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் நாய்கள் எப்படி மனிதர்களை காப்பாற்றுகின்றன என்ற கதையைக் கொண்டிருந்தன.

இப்போது நாய்களை மனிதர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் வந்த அலங்கு படமும் இதற்கு சாட்சி. 

இந்தப் படமும் சட்டப் போராட்டம் நடத்தும் ஒரு நாய்க்கு ஒரு வழக்கறிஞர் எப்படி உதவி செய்கிறார் என்ற கதையைக் கொண்டிருக்கிறது.

இதுவரை மனிதர்களுக்கான நீதியைக் காப்பாற்ற சட்டத்தைக் கையில் எடுத்த ‘திரையுலக சட்ட மேதை’ எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்தப் படத்தில் அதே சட்டங்களை…

Read More