September 4, 2025
  • September 4, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

தினசரி திரைப்பட விமர்சனம்

by by Feb 14, 2025 0

அவ்வப்போது குடும்பத்தினருக்கு புத்திமதி மற்றும் ஆலோசனைகள் சொல்லும் முகமாக படங்களை எடுத்து வந்தவர் இயக்குநர் வி.சேகர்.

அவரது படங்கள் இப்போது வராத குறைக்கு இந்தப் படத்தில் இன்றைய இளைஞர்களுக்கு சில அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ஜி.சங்கர்.

நடுத்தர வர்க்க எம்எஸ் பாஸ்கர் – மீரா கிருஷ்ணா தம்பதியின் மகனாக இருக்கும் நாயகன் ஸ்ரீகாந்த் ஐடி கம்பெனியில் போதுமான அளவு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் எட்டடி வீட்டுக்குள் குடித்தனம் நடத்துவது அவருக்கு வெறுப்பைத்…

Read More

ஃபயர் திரைப்பட விமர்சனம்

by by Feb 14, 2025 0

1996 இல் இந்தியில் இதே தலைப்பில் ஒரு படத்தை தீபா மேத்தா இயக்கியிருந்தார். அந்த நெருப்பு பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பற்றிக் கொள்வதாய் இருந்தது. 

முதல் முதலில் இந்தியாவில் லெஸ்பியன்கள் பற்றிய விஷயங்களைப் பிட்டுப் பிட்டு வைத்த படமாய் அது இருந்தது. ஆனால் இந்த ஃபயர் அப்படி இல்லை. பெண்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை ஒரு காமுகனை வைத்து பிட்டு பிட்டாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே.

நாகர்கோவிலில் நடந்த ஒரு உண்மைச் …

Read More

காதல் என்பது பொதுவுடைமை திரைப்பட விமர்சனம்

by by Feb 13, 2025 0

கல்லா கட்டுவதை மட்டுமே குறியாகக் கொண்டு களமிறங்கும் படங்கள் ஒரு வகை அதைத் தாண்டி ஒரு சமுதாயப் பிரச்சினையை விவாதப் பொருளாக்கி படம் பார்ப்போரை சிந்திக்க வைக்கும் படங்கள் இன்னொரு வகை. 

இரண்டாவது வகைப் படம் இது. அப்படி  சமுதாயத்தில் அங்கமாக இருக்கும் ஒரு காதல் பிரச்சினையை இதில் முன் வைக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

முதல் காட்சியில்… ஏன் முதல் ஷாட்டில் இருந்தே கதை சொல்ல ஆரம்பித்து சுபாஷ் பெறுகிறார் அவர்.

படத்தின் நாயகி லிஜோ மோல் ஜோஸ்,…

Read More

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by by Feb 12, 2025 0

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! 

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது. 

காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலீஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், புதுமையான,…

Read More

தண்டேல் திரைப்பட விமர்சனம்

by by Feb 8, 2025 0

உண்மைக் கதைகள் படமாக்கப்படும்போது அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் 2018 இல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை இது. 

ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சற்று வழி மாறி பாகிஸ்தான் கடல் பரப்புக்குள் சென்றதால் அங்கே சிறை பிடிக்கப்பட்டு 13 மாதங்கள் பாகிஸ்தான் சிறையில் கழித்தனர் அந்த சம்பவத்தைதான் இதில் ஒரு காதல் கதை கலந்து…

Read More

விடாமுயற்சி திரைப்பட விமர்சனம்

by by Feb 6, 2025 0

காதலின் வலிமை எத்தகையது என்பதை வீரம் செறிந்து விவேகம் பொதிந்து சொல்வதுதான் விடா முயற்சியின் கதை.

எத்தகைய இடர் வந்தாலும் காதலித்த பெண்ணைக் கைவிடாமல் இருப்பதுதான் ஒரு ஆணுக்கு அழகு என்பதைத் தாண்டி காதலித்த பெண் தன்னைக் கை விட்டு விட்டுப் போனாலும் அவளைக் காப்பது ஆணின் மாண்பு என்பதை இந்தப் படத்தின் மூலம்  சொல்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. 

அலட்டிக் கொள்ளாமல் வரும் கதைகளே அஜித்தின் ஸ்டைல் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு ஒரு லைனைப் பிடித்திருக்கிறார்…

Read More

ரிங் ரிங் திரைப்பட விமர்சனம்

by by Feb 1, 2025 0

ஒரு வீடு- நான்கு ஜோடிகள் இதை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தை முடித்து விட்டார் இயக்குனர் சக்திவேல்.

ஆனால் அதை எப்படி சொன்னால் சுவாரசியமாக இருக்கும் என்பதில்தான் அவரது சவால் அமைந்திருக்கிறது.

பிரவீன் ராஜா – சாக்‌ஷி அகர்வால், அர்ஜுனன் – சஹானா, விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் – ஜமுனாதான் அந்த நான்கு ஜோடிகள்.

இவர்களில் பிரவீன் ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி மற்ற மூன்று நண்பர்களும் தங்கள் இணையருடன் அதில் கலந்து கொள்ள…

Read More

ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா திரைப்பட விமர்சனம்

by by Jan 25, 2025 0

காலங்கள் தோறும் நாம் அறிந்து வைத்திருக்கின்ற ராமாயணம்தான் கதைக்களம். 

ஆனால், அது இலக்கியம் தொடங்கி தெருக்கூத்தாக… நாடகமாக… சினிமாவாக… அதிலும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாறுதல்களை அடைந்து வந்திருக்கும் பாதையில் இப்போது 2டி அனிமேஷனில் வந்திருக்கிறது.

தசரதனின் மகனாக ராமன் பிறந்தது முதல்… விசுவாமித்திரர் அறிவுரையின்படி தாடகையைக் கொன்றது, மிதிலையில் சுயம்வரம் வென்று சீதாவை கைபிடித்தது, கைகேயியின் திட்டப்படி காட்டுக்குச் சென்றது, அங்கு சீதையை ராவணன் கவர்ந்து சென்றது, சீதியைத் தேடிப்போன இடத்தில் சுக்ரீவனின் நட்பு கிடைத்தது, அதன்…

Read More

குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்பட விமர்சனம்

by by Jan 24, 2025 0

தலைப்பைப் பார்த்தால் ஏதோ குழந்தைகளுக்கான படம் போல் தோன்றும். அதை மெய்ப்பிப்பதைப் போல் குழந்தைகள் தான் முக்கிய பாத்திரங்களையும் ஏற்று இருக்கிறார்கள்.

ஆனாலும் இது குழந்தைகளுக்கான படமாகத் தெரியாமல், அரசியல் நிகழ்வுகளை – குறிப்பாக… தமிழகத்து அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்திருக்கும் படமாக இருக்கிறது.

தமிழகத்தை ஆளும் கட்சியில் முதல்வராக இருக்கிறார் செந்தில். அவர் கட்சியைச் சேர்ந்த யோகி பாபு மற்றும் சுப்பு பஞ்சுவுக்கு இடையில் ஒரு பனிப்போர் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் யோகி பாபுவின் மனைவி வயிற்றில்…

Read More

வல்லான் திரைப்பட விமர்சனம்

by by Jan 23, 2025 0

‘வல்லவன் ‘ என்ற தலைப்பு வைத்தாயிற்று. ‘வல்லவனுக்கு வல்லவனு’ம் ஏற்கனவே வைத்தாயிற்று- வேறு என்னதான் செய்வார்கள் இயக்குனர்கள்..? அதனால் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பு பிடித்திருக்கிறார் இயக்குனர் இயக்குனர் வி.ஆர்.மணி சேயோன்.

ஆனால், தலைப்பு புரிகிறது அல்லவா..? அதே  வல்லவன்தான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் காவல்துறையைச் சேர்ந்த சுந்தர் சி. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் எப்படித் துப்பறிந்து காவல்துறைக்குப் பெயர் வாங்கி தருகிறார் என்கிற லைன்தான்.

காவல் துறையில் இருந்தாலும் தன்யா ஹோப்புடன்…

Read More