June 18, 2026
  • June 18, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

பனை திரைப்பட விமர்சனம்

by by Sep 24, 2025 0

எந்தப் பகுதியும் வீணாகாமல் முழுவதும் பயன்படும் மரம் என்று வாழையைச்  சொல்வார்கள். ஆனால் வாழையை விட உயர்ந்த மரம் ஒன்று இருக்கிறது அதுதான் பனைமரம். 

ஏனென்றால் வாழைக்குக் கூட தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் தன்னை வளர்த்தவனுக்கு அந்த வேலையையும் வைக்காமல் வாழும் காலம் முழுவதும் அள்ளித் தருகிற தாவரமாக இருக்கும் பனை மரத்தின் பெருமையைச் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது. 

அத்துடன் பலன் எதிர்பார்க்காமல் அள்ளித்தரும் பனையை வைத்து ஆதிக்க மனம் கொண்டோர் பனையின் சொந்தக்காரர்களையே எப்படி…

Read More

சரீரம் திரைப்பட விமர்சனம்

by by Sep 23, 2025 0

இயற்கையில் நாம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே வாழ்வதுதான் சிறந்தது என்ற கருத்தைச்  சொல்லி இருக்கும் படம். இதை ஒரு கோர்ட்டே சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. 

புதுமுகங்கள் தர்ஷன் பிரியனும், சார்மி விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள். சார்மி பணக்கார வீட்டுப் பெண் என்பதால் வழக்கம் போல் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறது. சார்மியின் தந்தை புதுப்பேட்டை சுரேஷ், அவளைத் தன் மனைவியின் தம்பி மனோஜ்க்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். 

எனவே தர்ஷனுடன் வீட்டை விட்டு ஓடிப்…

Read More

படையாண்ட மாவீரா திரைப்பட விமர்சனம்

by by Sep 21, 2025 0

மறைந்த அல்லது வாழும் தலைவர்களை பற்றிய சுய சரிதத்தை பயோபிக் படமாக எடுக்கும் வழக்கம் எப்போதும் உண்டு.

ஆனால் அதில் உண்மை சம்பவங்களே இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் முன்னாள் எம்எல்ஏவும், மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மாநாடு காடுவெட்டி குருவின் வாழ்க்கையை கொஞ்சம் கமர்சியல் கற்பனையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் வ. கௌதமன்.

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மறைந்த அவரைப் பற்றிய தவறான தகவல்களை நீக்கும் பொருட்டும். அவர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் எவ்வளவு உழைத்தவர் என்பதை…

Read More

ராயல் சல்யூட் திரைப்பட விமர்சனம்

by by Sep 18, 2025 0

உலகளாவிய மனிதம் பேசும் கதை.  அதன் களமாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் போரை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய் சிவ சே.

கதை நாயகனாக நடிக்கும் பிரதீப் இந்திய பாகிஸ்தான் எல்லைப் போரில் குண்டடிபட்ட தங்களுடைய மேஜரை தூக்கிக்கொண்டு சக சிப்பாய் இன்பாவுடன் இந்திய முகாம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

பிரதீப்புக்கும் சரி இன்பாவுக்கும் சரி சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருக்க, இவர்கள் வரவுக்காக அவர்களது மனைவிமார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் போரில்…

Read More

தணல் திரைப்பட விமர்சனம்

by by Sep 15, 2025 0

நாயகன் அதர்வா உள்ளிட்ட ஆறு பேர் காவலர்களாக வேலைக்குச் சேர, இரவு ரோந்துக்கு அனுப்பப்படுகிறார்கள் அனைவரும்.

வழியில் சந்தேகத்துக்கு இடமான ஒருவரை அவர்கள் விசாரிக்க முயல… தப்பியோடும் அவரைத் துரத்திச் செல்லும்போது ஒரு ஆளரவமற்ற குடிசைப் பகுதியில் சிக்கிக் கொள்கிறார்களா.

அங்கு அஸ்வின் காக்கமனு தலைமையில் இயக்கும் சதிகார கும்பலொன்று இருக்க, அவர்கள் இந்த ஆறு பேரில் இருவரைக் கொல்ல, மீதி நால்வரும் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.

அந்த முயற்சியில் அந்த சதிகார கும்பலுக்கும் தங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தொடர்பு…

Read More

மிராய் திரைப்பட விமர்சனம்

by by Sep 15, 2025 0

கடந்த படத்தில் அனுமனை நாடியது போல் இந்தப்படத்தில் பகவான் ராமரையே பிடித்து விட்டார் தேஜா சஜ்ஜா.

அதேபோல் முந்தைய அனுமான் படத்தைப் போலவே இதையும் ஒரு Spritual Fantasy ஆகக் கொடுக்க நினைத்திருக்கிறார் அவர். அதைப் புரிந்துகொண்ட இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனியும் பக்காவாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

அந்தக் கதை இதுதான்..!

கலிங்கத்துப் போர் தந்த மாற்றத்துக்குப் பின் பேரரசர் அசோகர் புத்த மதத்தை தழுவிய கதை நமக்கு தெரியும். மனிதனின் மரணம் அவரை பெருமளவு பாதித்துவிட, ஒரு மனிதன்…

Read More

யோலோ திரைப்பட விமர்சனம்

by by Sep 13, 2025 0

இது youtube யுகம். அதன் அடிப்படையிலேயே  படத்தின் நாயகன் தேவ் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதன் பெயர்தான் ‘யோலோ..!’

இவரது நோக்கமே இரவில் பேய் போல வேடமிட்டு தனியாக வருபவர்களை பயமுறுத்தி பிராங்க் பண்ணுவது. அப்படி வில்லனின் ஆசை நாயகியை பிராங்க் பண்ணப் போய் அவர் கோமாவில் விழுகிறார்.

இன்னொரு பக்கம் நாயகி தேவிகாவை பெண்பார்க்க வருபவர்கள் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை தாங்கள்  அறிந்ததாக சொல்கிறார்கள். 

ஆனால் தேவிகா மறுக்க ஒரு கட்டத்தில் அவருக்கும் மேற்படி…

Read More

பாம் திரைப்பட விமர்சனம்

by by Sep 12, 2025 0

பெரும் தலைவர்களே தீர்க்க முடியாத தீண்டாமை பிரச்சினையை உயிரற்ற ஒரு பிணம் தீர்க்க முடியுமா..?

முடியும் என்றும் அது எப்படி முடிந்தது என்பதையும் சவாலான ஒரு கதையை வைத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.

தீண்டாமையின் ஊற்றுக்கண் எப்போதும் மனித வக்கிரகங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளி தேவை. அப்படி ஒரு ஆரம்ப புள்ளியாக இதில் தெய்வ நம்பிக்கை அமைகிறது. 

ஒன்றுபட்டு ஒரே கிராமமாக இருந்த போது மலை மீது மயில் ஒன்று அகவல் எழுப்பி…

Read More

குமார சம்பவம் திரைப்பட விமர்சனம்

by by Sep 12, 2025 0

சமுதாயத்துக்காகப் போராடும் சமூக போராளியான குமரவேல் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.

அவரைக் கொன்றது யார் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்க குமரவேல் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் (நாயகன்) குமரன் தங்கராஜன் விசாரணைக்கு உட்படுகிறார். 

போலீஸ் விசாரணையில் அவர் சொல்லும் கதைகள்தான் பிளாஷ்பேக்காக விரிகின்றன. 

அதில் குமரவேலின் கதையும், குமரனின் கதையும் ஒரு சேர காட்சிப்படுத்தப்படுகின்றன. 

குமரவேல் ஒரு சமூக போராளி என்பதால் நிறைய சமூகவிரோதிகள் மற்றும் பணக்காரர்களின் பகைமையை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவர்கள் மேல் போலீஸ் கவனம் திரும்ப……

Read More

பிளாக் மெயில் திரைப்பட விமர்சனம்

by by Sep 11, 2025 0

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும்.  அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.

சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம்  மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது…

Read More