April 29, 2024
  • April 29, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

அவள் அப்படித்தான் 2 திரைப்பட விமர்சனம்

by by Jul 19, 2023 0

1978-இல் ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் தமிழ் பட உலகில் என்றென்றும் பேசப்படத்தக்கது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற முயற்சியில் 2023-ல் வந்திருக்கிறது இந்தப் படம்.

இப்படத்தை இரா.மு. சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார். யுன் ப்ளிக்ஸ் (Yun Flicks) சார்பில் செய்யது அபுதாஹிர் தயாரித்துள்ளார்.

சின்ன லைன்தான் படத்தின் கதை.

மஞ்சு ஒரு தனியார் பள்ளி…

Read More

சக்ரவியூஹம் திரைப்பட விமர்சனம்

by by Jul 16, 2023 0

துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன.

அந்த வரிசையில் நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்து சேத்குரி மதுசூதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “சக்ரவியூஹம்”.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.

கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்க, படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு…

Read More

மாவீரன் திரைப்பட விமர்சனம்

by by Jul 14, 2023 0

கமர்ஷியல் ஹீரோவுக்கான இலக்கணமே அந்த ஹீரோவை குடும்பங்களுக்கு… முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவரும் சிவகார்த்திகேயனின் புதிய வரவு இந்தப் படம். இதிலும் அனைவருக்கும் அவரைப்பிடிக்குமா பார்க்கலாம்..!

‘வீரமே ஜெயம்’ என்பதுதான் கதைக்கான கரு. ஆனால், கதாநாயகன் தைரியமில்லாதவராக இருக்க, வீரம் எப்படி அவருக்கு கை வசம்… (இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால்) காது வசமானது என்பதை…

Read More

மிஷன் இம்பாசிபிள்:டெட் ரெகனிங்-பார்ட் 1 திரைப்பட விமர்சனம்

by by Jul 13, 2023 0

‘மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களில், 2018-ல் வெளிவந்த ‘மிஷன் இம்பாசிபிள் – ஃபால்அவுட்’ படத்தின் தொடர்ச்சியாகவும், மிஷன் இம்பாசிபிள் தொடர் வரிசைப் படங்களில் ஏழாவதாகவும் வந்துள்ள படம்.

 இதன் கதை இதுதான்…

இரண்டு பாகமாக பிரித்து செய்யப்பட்டு, இரண்டையும் இணைத்தால் மட்டுமே குறிப்பிட்ட துவாரத்துக்கு பொருந்தும்படியான ஒரு சாவி இருக்கிறது.

அதன் ஒரு பகுதி மிலிட்டரி தரப்புக்கு கிடைக்க, அடுத்த பகுதியை மீட்டு வரவேண்டிய பொறுப்பு படத்தின் ஹீரோ டாம் குரூஸ் வசம் தரப்படுகிறது. அந்த பணியை அவர் முடிப்பதற்குள்…

Read More

இன்ஃபினிட்டி திரைப்பட விமர்சனம்

by by Jul 9, 2023 0

தலைப்பைப் பார்த்ததும் நாம் பார்க்கப்போவது ஆங்கிலப் படமா தமிழ்ப் படமா என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதும் இது அக்மார்க் தமிழ்ப் படம் என்பது புரிந்துவிடுகிறது.

தமிழகத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற, தலைப்பு செய்தியாகும் இந்த கொலைகளைப் பற்றிய விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட நகரே தீப்பற்றிக் கொள்கிறது.

எனவே இந்தக் கேசை துப்பறிய சிபிஐயிடம் கோருகிறார்கள். சிபிஐயில் யாருக்கும் அடங்காமல் தன்னிச்சையாக செயல்படும் நட்டி நடராஜனிடம் இந்தக் கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. அவர்…

Read More

பம்பர் திரைப்பட விமர்சனம்

by by Jul 6, 2023 0

சோற்றுக்கு லாட்டரி அடித்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் ரவுடி ஒருவனுக்கு லாட்டரியில் ‘பம்பர் ‘ அடித்தால் என்ன ஆகும் என்கிற கதை. அதை மதம் கடந்த மனிதம் குழைத்துச் சொல்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

தூத்துக்குடி பகுதியில் ரவுடியாக இருக்கும் நாயகன் வெற்றி, நண்பர்களுடன் சேர்ந்து ராவடியான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சின்ன மீன்களுக்கு தூண்டில் போட்டு அலுத்துப் போன அவர் பெரிய மீனைப் பிடிக்க வலை வீச, ஆனால், அந்தோ… போலீஸ் விரிக்கும் வலைக்குள் வந்துவிடுகிறார்.

அதிலிருந்து தப்ப…

Read More

ராயர் பரம்பரை திரைப்பட விமர்சனம்

by by Jul 6, 2023 0

சாதி மத பேதங்களைச் சுட்டிக்காட்டி நிறைய படங்கள் வந்து கொண்டிருப்பதால் இதுவும் அப்படிப்பட்ட ஒரு சீரியசான படம் என்று நினைத்து விட வேண்டாம். சிரிப்பை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ராம்நாத்.டி.

கதை நடக்கும் கிராமத்தில் ராயர் என்கிற பாத்திரத்தில் வரும் ஆனந்தராஜ் வைத்ததுதான் சட்டம். அதிலும் அவரது தங்கை காதல் திருமணம் புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட, அவரது பெண் குழந்தையான சரண்யா நாயரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

முகப்புத்தகத்தில்…

Read More

மாமன்னன் திரைப்பட விமர்சனம்

by by Jun 30, 2023 0

“சமூக நீதியும், உரிமையும் விட்டுக் கொடுத்து வருவதல்ல…” என்ற கருத்தைக் கடத்த புனையப்பட்டிருக்கும் அரசியல் படம் இது.

மிகவும் முக்கியமான இந்தக் கருத்தைச் சரியாகக் கட்டமைத்திருக்கிறாரா இயக்குனர் மாரி செல்வராஜ் என்பதைப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் காசிபுரம் என்ற ரிசர்வ் தொகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ வாக இருக்கிறார் பட்டியல் இனத்தைச் சேர்ந்த (மாமன்னன்) வடிவேலு. அவரது மகன் அதிவீரனாக வரும் பட்டதாரியான உதயநிதி ஸ்டாலின், அடிவகை தற்காப்புக் கலை ஆசானாகவும், பன்றிகள் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராகவும் வருகிறார்.

இன்னொரு…

Read More

பாயும் ஒளி நீ எனக்கு திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2023 0

பாரதியின் வரிகள் பவர்ஃபுல்லானவை என்றாலும்… இந்த படத்துக்கு இந்த தலைப்பு பக்காவாக பொருந்துகிறது என்றாலும்… இத்தனை நீளமான தலைப்பை எழுத முடியாமல் போஸ்டரிலேயே சுருக்கி சுருக்கி எழுதி இருப்பதிலேயே தம் கட்டி இருக்கிறார்கள்.

இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் – இப்படி நீளமான தலைப்புகளை வைப்பதில் இருக்கும் சிரமத்தை. இதையும் படித்து புரிந்து கொண்டு தியேட்டருக்குள் வருபவர்களையாவது படம் திருப்திப் படுத்துகிறதா என்று பார்க்கலாம்.

முழுக்க பார்வைத் திறன் இல்லாத நாயகர்களை சார்லி சாப்ளின் காலத்தில் இருந்தே பார்த்து விட்டதாலோ…

Read More

அழகிய கண்ணே திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2023 0

இதுவரை வந்த சாதியக் காதல் சொல்லும் படங்களில் ஒரு பக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், இன்னொரு பக்கத்தில் வேறுபட்ட சாதியினரும் இருந்திருக்கிறார்கள். அந்த இன்னொரு பக்க சாதியினர் பிராமணர்களாக அதிகம் இருந்ததில்லை.

அப்படி இருந்த படங்களிலும் பிராமணர்கள் அமைதியான போக்கை மேற்கொள்பவர்களாகவும், எதிர்தரப்பு சாதியினர் மட்டுமே வன்முறை மிகுந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில்தான் முதல்முறையாக தங்கள் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போன இன்னொரு சாதியைச் சேர்ந்த ஆணை பிராமண சமூகத்தினர் வன்முறைப் பாதையில் கொலை செய்யும் அளவுக்குப்…

Read More