June 18, 2026
  • June 18, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

சரண்டர் திரைப்பட விமர்சனம்

by by Jul 31, 2025 0

இதில் சரண்டர் என்பது கைதியின் சரண்டர் இல்லை. ஒரு துப்பாக்கியின் சரண்டர். அதுவும் யாருடைய துப்பாக்கி தெரியுமா? 

மன்சூர் அலிகானின் துப்பாக்கி. அதுவும் அவர் நடிகர் மன்சூர் அலி கானாகவே வருகிறார். தேர்தல் வருவதை ஒட்டி அவருடைய துப்பாக்கியை போலீசில் சரண்டர் செய்து விட்டுப் போக, அது காணாமல் போகிறது.

அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பயிற்சி எஸ்.ஐ யாக இருக்கும் நாயகன் தர்ஷனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதற்கிடையே ஒரு பக்கம் தேர்தல் செலவுகளுக்காக உள்ளூர் தாதா சுஜித், பத்து கோடி ரூபாய்…

Read More

உசுரே திரைப்பட விமர்சனம்

by by Jul 31, 2025 0

தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியான சித்தூர் பக்கம் நடக்கும் காதல் கதை. 

அது எப்படிப்பட்ட காதல், அதன் முடிவு என்ன என்பதை, புதிதாக காதல் திருமணம் செய்த நவகீதன் தன் காதல் மனைவிக்கு அதைக் கதையாக சொல்லிக்கொண்டே மலை ஏறுகிறார். ஏன் மலை ஏற வேண்டும்..? அதவும் அந்தக் காதல் காரணமாகத்தான்..!

அந்தக் கதை இதுதான்…

அந்த ஊர் குவாரியில் வேலை பார்க்கும் நாயகன் டீஜே அருணாச்சலம் தன் எதிர்வீட்டில் குடி வந்த நாயகி ஜனனியை பெரும் முயற்சி செய்து…

Read More

போகி திரைப்பட விமர்சனம்

by by Jul 31, 2025 0

வசதிகள் குறைவான வனப்பகுதியில் வாழும் மக்கள் கல்வியில் சிறந்தாலும் நல்ல நோக்கத்துக்காக நகர்ப்புறம் வரும்போது இங்குள்ள நாகரிகம் அவர்களை எப்படி சிறுமைப்படுத்துகிறது என்பதை தற்கால நிஜ நிகழ்வுகளோடு கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.எஸ்.

தேனிக்கு மேல்… மூணாறுக்கு கீழ்… இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்கிற பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் நபி நந்தி.

பாலூட்டும் காலத்திலிருந்து அவர் தங்கையை கண்ணை இமை காப்பது போல் வளர்த்து வருவதை அந்த ஊரே…

Read More

அக்யூஸ்டு திரைப்பட விமர்சனம்

by by Jul 30, 2025 0

சிறைச்சாலையில் இருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கைதியை வழியிலேயே மடக்கிக் கொல்ல முயற்சி நடக்கிறது. 

அந்தக் கைதி நாயகன் உதயா. அவரை பத்திரமாக கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல, உதவி கமிஷனர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் இரண்டு கான்ஸ்டபிள்கள் பொறுப்பேற்கிறார்கள்.

அதில் ஒருவர் அஜ்மல். பயிற்சிக் காவலராக அசிஸ்டன்ட் கமிஷனரின் பணியாளராக இருந்து வருபவர் ஏசியின் உத்தரவுப்படி அந்தப் பணியை ஏற்கிறார். போகப் போகத்தான் அதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிகிறது.

அடுத்தடுத்து கொலையாளிகள் மட்டுமல்லாமல், காவல் துறையினரும்…

Read More

ஹவுஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Jul 30, 2025 0

காதலித்த அர்ஷா பைஜுவின் தந்தை கவிதா பாரதி ஒரு ஒப்புக்கு “உனக்கு ஒரு சொந்த வீடு இருக்கா..?” என்று கேட்ட பாவத்துக்கு படாதபாடு பட்டு ஒரு செகண்ட் ஹேன்ட் பிளாட்டை வாங்குகிறார் நாயகன் தர்ஷன்.

தன்னை நம்பி வந்த காதலியைத் திருமணம் செய்து கொண்டுஅந்த பிளாட்டுக்குள் குடியேறிய தர்ஷனுக்கு வினோத அனுபவங்கள் ஏற்படுகின்றன.

அதெல்லாம் நாம் பல காலமாக பார்த்துப் பழக்கப்பட்ட அமானுஷ்யங்களாக இருக்க, வழக்கமான ஆவி படம்தானே என்ற அலுப்புடன் செல்போனில் மெசேஜ் பார்க்க ஆரம்பிக்கும் நேரம்,…

Read More

தலைவன் தலைவி திரைப்பட விமர்சனம்

by by Jul 28, 2025 0

“கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்…” என்று ஒரு முதிர் மொழி வரும். 

ஆனால் காரணமே இல்லாமல் தோரணம் அமைக்க முடியும் என்பதை இந்தப் படம் மூலம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

‘ குடும்பம் என்று வந்துவிட்டாலே… அதுவும் கூட்டுக் குடும்பம் என்றாலே கணவன் மனைவி உறவுக்குள் அடிக்கடி பிணக்கு வந்துவிடும். பிரிவதும், பின் கூடுவதுமாக செல்லும் மனித வாழ்க்கையில் சுவாரசியமே அதுதான்…’ என்பதை மையப் புள்ளியாக வைத்து ஒரு முழு நீ….ள திரைக்கதை சொல்லி…

Read More

மஹாவதார் நரசிம்மா திரைப்பட விமர்சனம்

by by Jul 26, 2025 0

கேப்டனின் நரசிம்மா மட்டுமே பார்த்து வளர்ந்த இளைய வயதினருக்கு உண்மையான தசாவதார கதையான நரசிம்மரின் அவதார காரணத்தை காட்சி வடிவில் விளக்கி இருக்கும் படம்.

அதிலும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் 3டி அனிமேஷன் மூலம் வந்திருக்கும் இந்தப் படம் எந்த அவெஞ்சர்ஸ் படத்தை விடவும் கற்பனை வளம் மிகுந்தது. 

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இந்தக் கதைக்கு ‘ வராக அவதாரம்’ மற்றும் ‘நரசிம்மாவதாரம் ‘ என்று இரண்டு அவதாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன.

இரணிய கசிபு மற்றும் அவரது தம்பி…

Read More

மாரீசன் திரைப்பட விமர்சனம்

by by Jul 25, 2025 0

முதலில் மாரீசன் என்றால் யாருக்குப் புரியும்..? ஓரளவுக்கு இராமாயணம் அறிந்தவர்கள் மட்டுமே அதை கண்டுபிடிக்கலாம்.

அப்படி ராமாயணம் தெரியாதவர்களுக்காக நாம் சொல்லும் சின்ன முன் கதை.

ராவணன் சீதையைக் கவர்வதற்காக மாரீசன் என்கிற மாயாவியை அனுப்ப, அந்த மாரீசன் மாயமான் வேடம் கொண்டு சீதையின் கவனத்தைக் கவர, அதை துரத்திக்கொண்டு ராமன் காட்டுக்குள் போகும் போதுதான் ராவணன் சீதையைக் கடத்துகிறான். 

ஆக வெளி உலகத்திற்கு அப்பாவி மான் போல தோற்றமளிக்கும் மாரீசன், உண்மையில் ஒரு அரக்கன் என்பதுதான் அதன் பொருள்….

Read More

ஹரிஹர வீரமல்லு திரைப்பட விமர்சனம்

by by Jul 24, 2025 0

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு உதவும் ராபின் ஹுட் பாணி படங்கள் வந்து நீண்ட காலமாகிறது. அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது இது.  ஆனால் அது மட்டும் தான் கதையா என்றால் இல்லை…
 
‘மக்களின் சேவகன்’ என்று அறியப்படும் திருடனாக… படத்தில் நாயகன் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். எனவே, அவர் பெரிதும் நம்பும் சனாதன தர்மங்களை தூக்கிப்பிடிக்கும் சாதனமாகவும் இந்தப் படம் ஆகி இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
 
அவரது எல்லா செயல்களுமே மக்களின் நன்மைக்காகவே நடக்கிறது. அதுவும் அடக்குமுறைக்குட்பட்ட…

Read More

பன் பட்டர் ஜாம் திரைப்பட விமர்சனம்

by by Jul 20, 2025 0

கல்லூரி மாணவரான நாயகன் ராஜுவின் அம்மா சரண்யா பொன் வண்ணனுக்கு, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழி தேவதர்ஷினியின் மகள் ஆதியாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை.

ஆனால், ஆதியாவோ விஜே பப்புவை காதலிக்க, ராஜுவோ தனது சக மாணவி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, ராஜுவின் உற்ற நண்பன் மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக ராஜுவின் நட்பில் இருந்து விலகிச் செல்கிறார்.

இத்தனை குழப்பங்களுக்குள் ராஜுவின் காதலும், சரண்யா…

Read More