May 3, 2024
  • May 3, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

ராகவா லாரன்ஸ் முன்னெடுத்துள்ள தாய் அமைப்பு

by by May 14, 2019 0

தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு, கடந்த அன்னையர் தினத்தன்று ‘தாய் அமைப்பு’ என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களைக் காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

அதைப்போலவே தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தையும் வகுத்திருக்கிறாராம். 

இதைப்பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது,

Read More

தமிழுக்குத் தீங்கு வந்தால் – வைரமுத்து அறிக்கை

by by May 11, 2019 0

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு  கண்டிக்கிறேன்.

தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய்…

Read More

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு

by by May 10, 2019 0

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று (மே 10) காலை திருநெல்வேலியில் காலமானார். ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’ போன்ற படைப்புகளை தமிழுக்கு அளித்த பெருமைக்குரியவர் அவர்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் எனும் கிராமத்தில் செப்டம்பர் 26, 1944ஆம் ஆண்டில் தோப்பில் முகமது மீரான் பிறந்தார். இவருக்கு ஜலீலா மீரான் என்ற மனைவியும், ஷமீம் அகமது, மிர்சாத் அகமது என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

மலையாள…

Read More

தமிழாற்றுப்படை வரிசையில் பெரியார் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்

by by May 3, 2019 0

தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.
 
இதுவரை தொல்காப்பியர் – அவ்வையார் – கபிலர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – செயங்கொண்டார் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் – வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – கால்டுவெல் – பாரதியார் – பாரதிதாசன் – அண்ணா –  கலைஞர் – மறைமலையடிகள் -…

Read More

கொழும்பு குண்டுவெடிப்பில் 3 இந்தியர் உள்பட 215 பேர் பலி

by by Apr 21, 2019 0

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று எட்டு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பு இடங்களில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நான்கு ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகம் அடங்கும்.
 
மேலும் அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் தடுக்க இலங்கை முழுவதும் ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சில சம்பவங்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.
மேற்படி குண்டுவெடிப்புகளில் இந்தியா உள்பட அமெரிக்கா, சீனா, வங்காளதேசம், பாகிஸ்தான், டென்மார்க், மொராக்கோ…

Read More

சர்கார் விஜய் பாணியில் ஓட்டுப்போட்ட நெல்லைவாசி

by by Apr 19, 2019 0

தளபதி விஜய் நடிப்பில் A .R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்தது.
 
இந்தப் படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற செய்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.
 
இதே போன்ற நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
 
நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றறொருவர் கள்ள…

Read More

சினிமா நட்சத்திரங்கள் வாக்குப் பதிவு முழு கேலரி

by by Apr 18, 2019 0

Read More

அரசியலில் என்னை ஹீரோவாக்கி விடாதீர்கள் – ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

by by Apr 14, 2019 0

 அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்!
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து “அண்ணே… நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் “நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?” என தெரிவித்திருந்தீர்கள்…. அதன் பிறகும்… இரண்டு…

Read More

நடிகர் முன்னாள் எம்பி ஜேகே ரித்தீஷ் மரணம் வீடியோ

by by Apr 13, 2019 0

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. தேர்தல் பரப்புரை பணிக்காக அவர் ராமநாதபுரம் சென்றிருந்த போது மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஜே.ஜே. ரித்தீஷ், இலங்கை கண்டியில் பிறந்தவர். தமிழில் ‘சின்னபுள்ள’ படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பல படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இறுதியாக எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார்.

2009ம் ஆண்டில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2014 திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் அவர்…

Read More

சீண்டிய தொண்டரை பளார் விட்ட குஷ்பு வீடியோ

by by Apr 11, 2019 0

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ நேற்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
 
பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ‘ரிஷ்வான் அசாத்’துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை , காங்கிரஸ் மட்டும் தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்…” என்று பேசுகையில் குஷ்பூவின் பின்னால் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், குஷ்பூவின் முதுகுப் பகுதியில் சீண்டியதாகத் தெரிகிறது.
 
Read More