July 13, 2025
  • July 13, 2025
Breaking News
September 12, 2020

நீட் தேர்வு அச்சத்தில் ஒரே நாளில் மூன்றாவது பலி

By 0 710 Views
மருத்துவ படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. இன்று அதிகாலை மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா  நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தருமபுரியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளித்தது. 
 
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
 
இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.