இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருக்கும். ஆம்..!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திடீரென அறிவித்திருக்கிரார்.
இதற்கு அடுத்த அதிர்ச்சியாக அடுத்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
தோனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்” என பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து இந்திய வீரர் சுரேஷ்…
Read More
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நாவலூர் சுங்கச்சாவடி அருகே ஏகாட்டூரில் உள்ள மிக அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் சிறுமி ஒருவர் உயிரைப் பணயவைத்து நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமி 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் நடந்து செல்லும் காட்சியை அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலிஸார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று…
Read More
ராணுவத்தை மையப்படுத்தியுள்ள திரைப்படங்கள், வெப் சீரிஸ்களுக்கு தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதி இருக்கிறதாம்.
தற்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. நேரடியாக ஓடிடி வெளியிடும் திரைப்படத்திற்கும், வெப் சீரிஸ்-க்கும் தணிக்கை செய்யப்படுவதில்லை.
இதனால் பிறரை இழிப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும், தொடர்ந்து வெப் சீரிஸ்கள் வெளிவருகின்றன. இதற்கும் தணிக்கை வேண்டும் என பல தரப்பும் குரல் கொடுத்து வருகின்றன.
அந்தவகையில்…
Read More
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நியூஸ் 18 தொலைக்காட்சி, அதன் முதன்மை ஆசிரியர் குணசேகரன் மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்தார்.
அவதூறு செய்திகள் வெளியிட்ட மாரிதாசிடம் 1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைகாட்சியும் ஆசிரியர் மு.குணசேகரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் வீடியோக்களை…
Read More
”திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவானை வேண்டி நடத்தப்பட்டு வந்த நவக்கிரக சாந்தி ஹோமம், கரோனா பேரிடர் காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது.
தற்போது அரசு வழிகாட்டுதலின்படி கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கும் வகையில் இணையவழி பூஜை (இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம்) நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக www.thirunallarutemple.org…
Read More
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5471 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று.
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி ஆணையை நாளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி.
அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு – தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கிருமி நாசினியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் – மத்திய பொது சுகாதாரத் சேவை இயக்குனர் ஆர்கே…
Read More
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததை அடுத்து சமூகத்தில் பல சமூக ஊடகவியலாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒருவர் சூர்யா தேவி.
தன்னை கடுமையாக விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்திருந்தார். அதனடிப்படையில் சூர்யா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் விசாரணைக்கு உட்பட்ட சூர்யா தேவிக்கே கொரானா தொற்று இருப்பது உறுதியானது. எனவே அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர ரேணுகாவுக்கும் கொரோனா இருக்குமோ…
Read More
கொரோனா தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதை 2021ம் ஆண்டு வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் நியாயமான முறையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்யும்.
தடுப்பூசிகள் பலவும் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இதுவரை எதுவும் தோல்வி அடையவில்லை.
அடுத்த ஆண்டுதான் மக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வரும்…
Read More