November 14, 2024
  • November 14, 2024
Breaking News
August 11, 2020

சென்னையில் பயங்கரம் – 27 வது மாடி பக்கவாட்டு சுவரில் நடந்த 15 வயது சிறுமி

By 0 539 Views

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நாவலூர் சுங்கச்சாவடி அருகே ஏகாட்டூரில் உள்ள மிக அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் சிறுமி ஒருவர் உயிரைப் பணயவைத்து நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமி 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் நடந்து செல்லும் காட்சியை அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலிஸார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று விசாரணையை நடத்தினர்.

அப்போது அங்கு வசித்து வரும் ஒரு தம்பதியினரின் 15 வயது மகள்தான், தனது அண்ணன் பந்தயம் கட்டியதற்காக உயிரை பணையம் வைத்து 29வது மாடியின் பக்கவாட்டில் நடந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.