April 26, 2024
  • April 26, 2024
Breaking News
July 27, 2020

ஜூலை 26 இன்றைய முக்கிய இரவுச் செய்திகள்

By 0 428 Views

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5471 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று.

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி ஆணையை நாளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி.

அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு – தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

கிருமி நாசினியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் – மத்திய பொது சுகாதாரத் சேவை இயக்குனர் ஆர்கே வர்மா.

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – முக.ஸ்டாலின்.

82 வயதான எனது தந்தையையும், என்னையும் கொரோனாவில் இருந்து குணப்படுத்தியது ஆயுர்வேத மருத்துவம் தான் – நடிகர் விஷால்.

கன்னியாகுமரி : கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.பலி எண்ணிக்கை 3,494 ஆக அதிகரிப்பு – சுகாதாரத்துறை.

வந்தவாசி அருகே ஃபேஸ்புக் பழக்கத்தின் மூலம் 15 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 53,703 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – சுகாதாரத்துறை.

சென்னையில் இன்று 1,155 பேருக்கு கொரோனா தொற்று.

டெல்லியில் ஒரே நாளில் புதிதாக 1,075 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,606 ஆக அதிகரிப்பு.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,75,799 ஆக அதிகரிப்பு.

ஆந்திராவில் ஒரே நாளில் புதிதாக 7,627 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,298 ஆக அதிகரிப்பு.

நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் புதிய கொரோனா பரிசோதனை வசதிகளை நாளை காணொலியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

திருவள்ளூர் : பழவேற்காடு பகுதியில் கலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என பழவேற்காடு ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம்.

இழந்த பணத்தை மீட்டு விடலாம்; இழந்த புகழை மீட்டு விடலாம்; ஆனால் இழந்த நேரம் திரும்ப வராது – இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான்.

அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது; நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன – இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவியை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்தினார்.

புதுச்சேரி சட்டப்பேரவை காவலர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால் சட்டப்பேரவை வளாகம் மூடப்பட்டது.

தமிழகத்தில் உதவி ஆய்வாளர், 2ம் நிலைக்காவலர் தேர்வை ஆன்லைனில் நடத்தத் திட்டம்.

சீமான் மற்றும் ஹரி நாடார் தன்னை அவமானப்படுத்தியதாக வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி.

சென்னை அடையார் மலர் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பேரூராட்சியில் 20 நாட்களுக்கு முழு ஊரடங்கு! – தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி நடவடிக்கை.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.