March 22, 2025
  • March 22, 2025
Breaking News
July 26, 2020

வனிதா கேசை பிடிக்கப்போய் கொரோனா வந்து சேர்ந்தது

By 0 745 Views

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததை அடுத்து சமூகத்தில் பல சமூக ஊடகவியலாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒருவர் சூர்யா தேவி.

தன்னை கடுமையாக விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்திருந்தார். அதனடிப்படையில் சூர்யா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விசாரணைக்கு உட்பட்ட சூர்யா தேவிக்கே கொரானா தொற்று இருப்பது உறுதியானது. எனவே அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர ரேணுகாவுக்கும் கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை செய்ததில் அவருக்கு தொற்று  இருப்பது உறுதியானது.

பிள்ளையார் பிடிக்க குரங்கானது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது கேஸ் பிடிக்கப் போய் கொரோனா வந்து சேர்ந்தது.