October 26, 2025
  • October 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

மதராஸி திரைப்பட விமர்சனம்

by by Sep 5, 2025 0

தமிழ்நாடு எப்போதும் அமைதிப் பூங்காதான். இங்கே எந்த விதத்தில் பிரிவினையையோ, வன்முறையையோ விதைக்க நினைத்தாலும் அதன் விளைவு பூஜ்யமாகத்தான் இருக்கும் என்று ‘அடித்து’ச் சொல்கிற கதை.

அதில் காதல் முலாம் பூசிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

ஆக்ஷன் கதையா என்றால் “ஆமாம்…” என்று சொல்லலாம். காதல் கதையா என்று கேட்டால் அதற்கும் “ஆமாம்..!” என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதி மத பூசல்களால் தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று உணர்ந்து கொண்ட சர்வதேச சக்திகள் ஆயுதப் புழக்கத்தின்…

Read More

குமார சம்பவம் என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவம்..! – குமரன் தங்கராஜன்

by by Sep 3, 2025 0

*நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

Trailer ▶️ https://youtu.be/cTTlzYh246I

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல்,…

Read More

கட்டா குஸ்தி 2 பிரம்மாண்ட பூஜையுடன் இனிதே துவங்கியது!

by by Sep 2, 2025 0

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” இன்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது.

முன்னதாக, நேற்று இப்படத்தின் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்…

Read More

லோக்கா – சாப்டர் 1 சந்திரா திரைப்பட விமர்சனம்

by by Sep 1, 2025 0

சூப்பர் ஹீரோக்களை பார்த்துவிட்ட இந்திய பட உலகம் இப்போது சூப்பர் உமன்களை பற்றிப் படம் எடுக்கத் தொடங்கிவிட்டது. 

சமீபத்தில்தான் இதே படம் தயாரிக்கப்பட்ட கேரளாவில் ககனாசாரி என்ற படம் வெளியானது. அதில் கதாநாயகி 150 வயதுள்ள வினோத சக்திகள் கொண்ட ஏலியனாக வந்தார். 

இதிலும் கிட்டத்தட்ட அதேபோன்ற பாத்திரம்தான் நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு. பார்வைக்கு 20 வயதில் இளமை தோற்றத்துடன் இருக்கும் அவர் உண்மையில் யார் என்ற பிளாஷ்பேக் தெரிய வரும்போது நாம் அதிர்ந்து போகிறோம். இவருக்கும் அப்படிப்பட்ட…

Read More

மிராய், என்றால் ‘எதிர்காலத்தின் நம்பிக்கை’ என்று அர்த்தம்..! – தேஜா சஜ்ஜா.

by by Sep 1, 2025 0

‘ மிராய் ‘ பத்திரிகையாளர் சந்திப்பு..!

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில்,

தேஜா சஜ்ஜா பேசியபோது,

“அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த…

Read More

பாம் இயக்குனர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பன்..! – ரா பார்த்திபன்

by by Aug 31, 2025 0

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன்…

Read More

முதல் படத்தில் சம்பளத்துக்கு அலையாதீர்கள்..! – இளம் இயக்குனர்களுக்கு ஆர்கே செல்வமணி அட்வைஸ்

by by Aug 31, 2025 0

“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக…

Read More

குற்றம் புதிது திரைப்பட விமர்சனம்

by by Aug 30, 2025 0

இது சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் யுகம். மாநகரில் சில கொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதை செய்வது யார் என்று போலீஸ் துப்பறிவதும் கடைசியில் எதிர்பாராத ஒருவர் கொலையாளியாக இருப்பதும் சமீபகால படங்களில் நாம் காணும் கதையாக இருக்கிறது. 

ஆனால் தலைப்புக்கு தகுந்தாற்போல் இந்தப் படத்தில் நடக்கும் குற்றம் புதிதாகத்தான் இருக்கிறது.

வேலைக்குப் போன நாயகி சேஷ்விதா கனிமொழி, இரவு வீடு திரும்பவில்லை. தன் அப்பாவான அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனனிடம், தான் ஆட்டோவில் வருவதாகக் கடைசியாக தகவல் தெரிவித்திருக்கிறார்.

இரவு முழுதும்…

Read More

வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கிடைத்தது போல் உள்ளது..! – நடிகர் பாலா

by by Aug 29, 2025 0

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது :

தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது,

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து…

Read More

சொட்ட சொட்ட நனையுது திரைப்பட விமர்சனம்

by by Aug 29, 2025 0

இந்த தலைப்புக்கும் இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்கும்  இப்படி ஒரு தொடர்பு இருக்கும் என்று யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. 

மண்டையில் முடி இல்லாதவர்களை சொட்டை என்று கொச்சையாக கூறுவோம். அந்த சொட்டையைப் பற்றிய கதைதான் இது.

வசதியான வீட்டு பையன்தான் என்றாலும் நாயகன் நிஷாந்த் ரூஷோவுக்கு இந்த வழுக்கை தலை பிரச்சனை, தலையாய பிரச்சனையாகி விடுகிறது. இந்த காரணத்தினால் எந்த பெண்ணும் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. 

இவரது அப்பாவும் சிறு வயதிலேயே வழுக்கை விழுந்தவர்….

Read More