சினிமா பிரபலங்களைப் பற்றிய பாலியல் புகார்கள் கூறிவரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்ப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ்ப்பிரபலங்களும் அடங்குவர்.
இதில் சுந்தர்.சி மட்டும் இதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, மற்றவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இந்நிலையில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் மற்றும் சமூக சேவகரான ராகவா லாரன்ஸ் நேற்று ஸ்ரீரெட்டி…
Read More
சமீபத்தில் படத்துக்குப் படம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் தன் தனித்திறமையால் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர் சாம் சிஎஸ். ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று வரிசையாக அவர் இசைத்த படங்களே அதற்கு உதாரணம்.
இப்போது அந்த வரிசையில் மாறுபட்ட கேங்ஸ்டர் படமாக உருவாகும் ‘வஞ்சகர் உலகம்’ படத்துக்கு தன் இசைப்பூச்சால் மெருகூட்டி வருகிறார் சாம் சிஎஸ். இந்தப்படத்தில் ஒரு ரொமான்டிக்க்கான மெல்டி பாடல் வருகிறது. அதற்கு யாரைப் பாடவைக்கலாம் என்று யோசித்தவருக்கு சட்டென்று யுவன்…
Read More
‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ‘கஜினிகாந்த்’தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்றதும் கேட்டவர் எல்லோரின் புருவங்களும் ஒருகணம் உயரும். ‘அடல்ட் காமெடி’ என்று குடும்பத்தினர் முகம் சுளிக்கும் படங்களைத் தொடர்ந்து எடுத்து வருபவர் என்பதால் எல்லோர் மனத்திலும் தோன்றும் ஒரே கேள்வி. “இந்தப் படமும் அந்த வகையறாதானா..?”
அதற்கு பதில் சொன்னார் சந்தோஷ், ‘கஜினிகாந்த்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்…
“ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனத்துக்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது…
Read More
கோலிவுட்டில் ‘ஹாரர் ஜேனர்’ என்கிற ஆவி பறக்கும் கதைகள் ஓய்ந்து இது ‘டான்’கள் டாலடிக்கும் (டாவடிக்கும்..?) ‘டார்க் காமெடி’ சீசன். அதில் சின்னதாய் ‘சூது கவ்வும்’ படத்தில் வெற்றியைக் கவ்வி விட்ட மகிழ்ச்சியில் ‘பெரிசாய்’ பண்ண விஜய் சேதுபதி ஆசைப்பட்டிருக்கும் ‘படா’ படம் இது.
பொள்ளாச்சியில் தானுண்டு தன் கண்டக்டர் வேலை உண்டு என்று ஜாலியாக ஒரு தெலுங்குப் பெண்ணை டாவடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு அந்தப் பெண்ணாலேயே ஒரு சண்டையில் பராக்கிரமத்தைக் காட்ட வேண்டிவர, அதனால்…
Read More
ஒரு ஹீரோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ஒரு ஹீரோயினுக்கு இல்லாத தமிழ்ப்பட உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ‘ஒன் அன்ட் ஒன்லி’ நயன்தாரா மட்டுமே.
இன்றைக்கு ஒரு ஹீரோ படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படி நயன்தாரா முதன்மைப் பாத்திரமேற்கும் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா வர்த்தகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
Read More
வளர்ந்து வரும் தொழில்நுட்பப் புரட்சியில் இனி கேளிக்கைகளுக்குப் பஞ்சமேயில்லை. அது சினிமாவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சாடிலைட் சானல்கள் தாண்டி இப்போது வீடியோ சேவையும் கலந்துகட்டி ரசிகர்களைக் கண்ணி போட்டு இழுத்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் காணத்தான் கண்கள் கோடி வேண்டும்.
அந்த வரிசையில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தலைமையகத்தை கொண்டு, இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆன் டிமாண்ட் சேவையை வழங்கும் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மீடியா நிறுவனமான Vuclip,…
Read More