January 29, 2026
  • January 29, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சவுண்டை வைத்து பேயைக் காட்டுவது சவாலாக இருந்தது – அறிவழகன்

by by Feb 20, 2025 0

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”. 

காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள…

Read More

பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார்..! – நட்டி நட்ராஜ்

by by Feb 20, 2025 0

*பாரதிராஜா – நட்டி நட்ராஜ் – ரியோ ராஜ் – சாண்டி மாஸ்டர் – ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

அறிமுக இயக்குநர்…

Read More

‘மெட்ரோ’ சத்யா நாயகனாகும் ‘ராபர்’ – விஜய் சேதுபதி வெளியிட்ட டிரெய்லர் 

by by Feb 20, 2025 0

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’.

இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்

இப்படத்தின் கதை சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ளது.   

இப்படத்தின் கதை, திரைக்கதையை ‘மெட்ரோ’ , ‘கோடியில் ஒருவன்’ படங்களை…

Read More

ராமம் ராகவம் படத்தைப் பார்த்து ஒரு மகன் திருந்தி விட்டால் போதும் – சமுத்திரக்கனி

by by Feb 19, 2025 0

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட்…

Read More

2K லவ்ஸ்டோரி நன்றி அறிவிப்பு விழா !

by by Feb 18, 2025 0

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம் !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன்…

Read More

இப்போது எல்லா வில்லத்தனங்களையும் கதாநாயகர்கள் செய்கிறார்கள் – எஸ்.ஏ.சி வேதனை

by by Feb 18, 2025 0

கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.அது பற்றிய விவரம் வருமாறு:

ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்
திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சித்தார்த் விபின் இசை…

Read More

அது வாங்குனா இது இலவசம் திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

தலைப்பைப் பார்த்துவிட்டு “எது வாங்குனா எது இலவசம்..?” என்றுதானே யோசிக்கிறீர்கள்..? வேறு என்ன வினைதான். ஒரு வேண்டாத வினையை நீங்கள் விலை கொடுத்து வாங்கப் போனால் அதன் விளைவு உங்கள் பின்னாலேயே இலவசமாய் துரத்திக் கொண்டு வரும் என்பதைத்தான் இயக்குனர் எஸ்கே.செந்தில் ராஜன் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை மாவட்டங்களையும் கலவர பூமியாகக் காட்டி ஆயிற்று, இனி வேறு என்ன மீதி இருக்கிறது என்று இயக்குநர் யோசித்து இருப்பார் போல. அதனால், இதுவரை இல்லாத விதமாக இதில்…

Read More

2கே லவ் ஸ்டோரி திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

காதலும், நட்பும்தான் காலம் உள்ளவரை சினிமா ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய காரணிகளாக இருக்கும். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இந்தக் கால இளைஞர்களுக்காக காதலையும், நட்பையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார்.

குழந்தைப் பருவத்திலிருந்து நட்புடன் பழகி வரும் ஜெகவீரும், மீனாட்சி கோவிந்தராஜனும் பருவ வயது வந்தும் அதே நட்புடன் பழகி வருகிறார்கள். ஊர் உலகம், நண்பர்கள் ஏன் ஒரு கட்டத்தில் அவர்களது பெற்றோரே கூட அவர்கள் இருவரும் காதலிப்பதாக நினைக்கிறார்கள். 

ஆனால் ஜெகவீரோ மீனாட்சியின்…

Read More

பேபி & பேபி திரைப்பட விமர்சனம்

by by Feb 15, 2025 0

“அதென்ன பேபி & பேபி..?” என்று யோசிக்கிறீர்களா? கதைப்படி இரண்டு பேபிகள் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன. எனவேதான் பேபி & பேபி..!

ஒரு பக்கம் பெரிய ஜமீன்தாராக இருக்கும் சத்யராஜ் தன் மகன் ஜெய்க்கு பெரிய இடத்தில் திருமணம் முடித்து தன் ஜமீனைக் கட்டி ஆள அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால், அப்பாவின் விருப்பத்திறகு மாறாக காதல் திருமணம் புரியும் ஜெய், சத்யராஜின் கோபத்துக்கு ஆளாகி வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்.

இன்னொரு பக்கம்…

Read More

தினசரி திரைப்பட விமர்சனம்

by by Feb 14, 2025 0

அவ்வப்போது குடும்பத்தினருக்கு புத்திமதி மற்றும் ஆலோசனைகள் சொல்லும் முகமாக படங்களை எடுத்து வந்தவர் இயக்குநர் வி.சேகர்.

அவரது படங்கள் இப்போது வராத குறைக்கு இந்தப் படத்தில் இன்றைய இளைஞர்களுக்கு சில அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ஜி.சங்கர்.

நடுத்தர வர்க்க எம்எஸ் பாஸ்கர் – மீரா கிருஷ்ணா தம்பதியின் மகனாக இருக்கும் நாயகன் ஸ்ரீகாந்த் ஐடி கம்பெனியில் போதுமான அளவு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் எட்டடி வீட்டுக்குள் குடித்தனம் நடத்துவது அவருக்கு வெறுப்பைத்…

Read More