ராக்கி பற்றிய திரைப்பட விசனம்
நன்றாக வைத்தார்கள் ரவுடி பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனத்துக்கு பெயர் – நயன்தாரா விக்னேஷ் சிவன் நடத்தும் சினிமா கம்பெனியைத்தான் சொல்கிறோம். பெயரில் என்ன இருக்கிறது… நல்ல படம் எடுத்தால் சரிதான் என்று அவர்கள் எடுத்த படங்களை ஆதரிக்கவே செய்தோம்.
ரைட்டர் திரைப்பட விமர்சனம்
போலீஸ் கதைகளில் இதுவரை நல்ல போலீஸ், தீய போலீஸ் என்று இரண்டு வகை போலீஸைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் போலீஸ் எப்படி இயங்குகிறார்கள் என்று சொன்ன படங்கள் குறைவு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடாத இரண்டு போலீஸ் விஷயங்களை முன்னிறுத்தி இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப்.
அவை பல காலமாக கேட்கப்பட்டு வரும் போலீஸ் சங்க விவகாரம் ஒன்று. இன்னொன்று நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காவலர்களின் தற்கொலை. இதற்காகவே பிராங்க்ளினைப் பாராட்டலாம்.
திருவெறும்பூர் காவல் நிலையத்தில்…
Read More
தள்ளிப் போகாதே படத்தின் திரை விமர்சனம்
காலம் காலமாக காதல் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை. அது ஒரு தலைக் காதலோ, இருதலைக் காதலோ அல்லது முக்கோணக் காதல் கதையோ, அதை எப்படிச் சொல்கிறார்கள், என்ன விதமான பிரச்சனைகளை உள்ளே வைத்து என்ன சுவாரஸ்யத்தைத் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தே காதல் கதைகள் வேறுபடுகின்றன.
ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் திரை விமர்சனம்
எதிர்மறையான தலைப்புகள், தவறான உறவுகள், கொடூரம் கொண்ட திருப்பங்கள், சாதிய கலப்புகள் என்றெல்லாம் தமிழ் சினிமா வேறு வேறு பாதையில் போய்க் கொண்டிருக்க நல்ல விஷயங்களை சொல்லும் நேர்மறையான கதைகளைக் கொண்ட படங்கள் அருகி வருகின்றன.
பிளட் மணி Blood Money படத்தின் திரை விமர்சனம்
இருபத்து ஏழரை மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான ஒரு திரில்லர்.
படத்தில் முக்கிய பாத்திரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் ஒரு முன்னணி மீடியாவில் வேலை பார்க்கிறார். சமையல் ஷோ நடத்தி கொண்டிருந்தவருக்கு செய்திப் பிரிவுக்கு புரமோஷன் கிடைக்க அவர் ஏற்றுக் கொள்ளும் முதல் வேலையே மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகிறது.
குவைத்தில் வேலை பார்க்கும் கிஷோரும் அவரது தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்க அவர்கள் ஏற்படுத்திய ஒரு விபத்துக்காக ஐந்து வருடம் கழித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. அதிலிருந்து…
Read More
வரிசி படத்தின் திரை விமர்சனம்
காலம்தோறும் காமுகர்களுக்குக் குறைவில்லை. அதுவும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய நேரும் ஐடி துறை பெண்களுக்கு இருக்கும் சவால்கள் பெரிதானவை.
அப்படி ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் கடத்தி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட, அந்த வழக்கை சிபிஐ அதிகாரி கிருஷ்ணா விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் நாயகன் கார்த்திக் தாஸ் நாயகி சப்னா தாஸ் உள்ளிட்ட ஐடி துறை இளைஞர்கள் அந்தத் துறையில்புது வகையிலான மென்பொருள்களை உருவாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் காமுகனால் கதாநாயகியும் கடத்தப்பட, அவரை காப்பாற்றும் முயற்சியில்…
Read More
இறுதி பக்கம் படத்தின் திரை விமர்சனம்
சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு எப்போதும் ஒரே டெம்ப்ளேட் தான். படத்தில் ஒரு கொலை அல்லது ஏதோ ஒரு க்ரைம் நடந்து விட, அது யாரால் செய்யப்பட்டது எதற்காக செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதுதான் அந்த டெம்ப்ளேட் ஆக இருக்கும்.
அதை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்ல முடியுமோ அவ்வளவு விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸ் கலந்தும் சொல்வதுதான் படத்தின் வெற்றி. அந்த வகையில் இறுதி பக்கம் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
தனிமையில் வசிக்கும் நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசனுக்கு ஏதோ பிரச்சனை இருப்பது…
Read More
உத்ரா படத்தின் திரை விமர்சனம்
ஆவிகளில் இந்த உத்ரா ஒரு வித்தியாசமான ஆவி. அது பீடித்த வட்டப்பாறை ஊரில் ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க கூடாது. இரவில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள கூடக் கூடாது.
அட… டீ கடை வடை பஜ்ஜியில் கூட உப்போ காரமோ போட்டு சாப்பிடக் கூடாது. இப்படி ஏதாவது கூடினால் போச்சு. உடனே வந்து அடித்து துவம்சம் செய்துவிடுகிறது உத்ரா ஆவி.
இந்த மேட்டரை அரசல்புரசலாக தெரிந்துகொண்டு அந்த ஊருக்கு வரும் மூன்று ஜோடி மாணவர் அணி ஆவியை எப்படி சோதிக்கிறது….
Read More
ஆன்டி இண்டியன் படத்தின் திரை விமர்சனம்
10 வருடங்களுக்கும் மேல் பத்திரிகை சாராத சுதந்திர விமர்சனத் துறையில் சமூக வலைதளத்தில் தவிர்க்கமுடியாத விமர்சகராக இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
மட்டி படத்தின் திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘போர்டு vs பெராரி’ வகையிலான கார் பந்தயப் படங்கள் இந்திய அளவில் சாத்தியமாகாமல் இருந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை, எங்களாலும் எடுக்க முடியும் என்று பேன் இந்தியா படமாக இதை ஆறு மொழிகளில் எடுத்துக்காட்டி சாதித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் டாக்டர் பிரகபல்.