September 14, 2025
  • September 14, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

HMM திரைப்பட விமர்சனம்

by by Sep 22, 2024 0

HMM என்பதன் விரிவாக்கம் Hug me More என்பதறிக. அதற்காக இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். அக்மார்க் தமிழ்ப் படம்தான். 

டைட்டில் போடும்போது கூட விண்வெளியில் சேட்டிலைட் எல்லாம் காட்டி ஏதோ ஆங்கிலப்படம் பார்க்கப் போகிறோம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருப்பதும் நிஜம். 

ஆனால் தரைக்கு இறங்கி, கதைக்கு வந்ததும் இது தமிழ்ப் படம் தான் என்று உணர வைத்து விடுகிறது. 

காட்டுக்குள் தனியே இருக்கும் காட்டேஜில் ஒரு விஞ்ஞானியாக இருக்கும் நாயகன் நரசிம்மன்…

Read More

கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்பட விமர்சனம்

by by Sep 22, 2024 0

தன் ஒவ்வொரு படத்திலும் மனித மனங்களை உரசிச் செல்லும் கதைகளைச் சொல்லும் சீனு ராமசாமி இந்தப் படத்தில் தொட்டிருப்பது ஒரு அண்ணன் தங்கையின் பாசக்கதை.

பெற்றோரால் கைவிடப்பட்ட நாயகனும், அவர் தங்கையும் ஆதரவு இல்லாமல் கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபுவிடம் வந்து சேர்கிறார்கள். வளர்ந்ததும் தானும் ஒரு கோழிப் பண்ணை வைத்து நடத்துகிறார். பருவ வயது வந்த இருவரில் அவருக்கு மட்டும் இல்லாமல், தங்கைக்கும் காதல் வர, அந்தப் பாசக்கார அண்ணனின் நிலை என்ன என்பதுதான் மீதிக்கதை.

நாயகனாக…

Read More

தோழர் சேகுவேரா திரைப்பட விமர்சனம்

by by Sep 21, 2024 0

ஏகப்பட்ட கொலைகளில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கொலைகளைச் செய்தது யார் என்கிற கேள்வியை எழுப்பும் சத்யராஜின் குரலே படத்தை வழி நடத்திச் செல்கிறது. அவர்தான் படத்துக்குள் சேகுவேரா என்று அறிக.

ஒரு புதுமுகமாக படத்தில் நடிப்பதே ஆகப்பெரிய விஷயம். எனில் அந்தப் படத்தை இயக்கி நடிப்பது அதைவிடப் பெரிய விஷயம் என்று இருக்க, அந்த இரு பெரும் சுமைகளையும் தாங்கி நடித்து இயக்கியிருக்கிறார் ஏ.டி. அலெக்ஸ்.

தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்று மேலே வந்து விட்டால் தங்கள் உயர்த்தப்பட்ட வாழ்க்கைக்கு…

Read More

லப்பர் பந்து திரைப்பட விமர்சனம்

by by Sep 20, 2024 0

லகான்’ காலத்திலிருந்து நாம் கிரிக்கெட் விளையாட்டைப் பல படங்கலில் பார்த்து விட்டோம். இது இன்னும் ஒரு கிரிக்கெட் விளையாட்டுப் படம் என்றாலும், பிரச்சினை கிரிக்கெட்டில் வெல்வது அல்ல என்ற அளவில் வித்தியாசத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.

இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. அதை லப்பர் பந்தின் விலையின் மூலமாகவே சொல்லிவிடும் இயக்குனரின் சாமர்த்தியம் பாராட்ட வைக்கிறது. 

முதல் காலகட்டத்தில் இளைஞராக இருக்கும் அட்டகத்தி தினேஷ் லோக்கல் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் ஆடும்… ஆனால், நட்சத்திர வீரராக…

Read More

நந்தன் திரைப்பட விமர்சனம்

“ஆள்வதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கே அதிகாரம் வேண்டும்…” என்ற நிலைப்பாட்டைக் கோட்பாடாக்கும், சமூக அடித்தட்டு மக்களின் கதைதான் நந்தன். 

சமூக நீதிக்காக அரசு ஆயிரம் திட்டங்கள் வகுத்தாலும், அவற்றைக் கூட ஆதிக்க சாதியினர் எப்படிக் கூட்டிப் பெருக்கி, கழித்துத் தங்களுக்குச் சாதகமாகக் கணக்குப் போடுகிறார்கள் என்பதை இதுவரை சொல்லாத களம் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.

“இப்படி எல்லாம் நடக்கிறதா என்று கேட்பவர்களைக் கைப்பிடித்து அங்கே அழைத்துச் சென்று காட்டத் தயாராக இருக்கிறேன்..!” என்று படத்தின் ஆரம்பத்தில் இயக்குனர்…

Read More

GOAT திரைப்பட விமர்சனம்

by by Sep 6, 2024 0

Greatest Of All Time என்கிற அற்புதமான பதத்தை GOAT என்று மலிவான சிந்தனையில் சுருக்கியபோதே இந்த ஆடு, அறுப்புக்கு ரெடி ஆகிவிட்டது புரிந்து போனது.

(தவிர்க்க முடியாமல் இதில் நிறைய Spoilerகள் இருப்பதால் படம் பார்க்காதவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்க்கவும்)

30 வருடங்களுக்கு முன் வந்த இந்தியன் பட லைனைப் புளிக்க வைத்து… போன வருடம் ஜெயிலராக்கினார்கள். இப்போது அதே புளித்த மாவை வைத்துத் தன் பங்குக்கு செட் தோசை (2 விஜய்கள்) சுட்டு இருக்கிறார்…

Read More

உழைப்பாளர் தினம் திரைப்பட விமர்சனம்

by by Aug 31, 2024 0

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உலகத் தொழிலாளர்களுக்கு ஒரு உயரிய செய்தியைச் சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றியது. 

ஆனால் இதில் இயக்குனரும் நாயகனும் ஆன சந்தோஷ் நம்பிராஜன் சொல்லி இருப்பது வேலைக்காக வெளிநாடு செல்லும் உழைப்பாளிகளைப் பற்றிய கதை.

அதிலும் நன்கு படித்து தொழிலுக்காகவோ, அல்லது உயர் பதவிகளுக்காகவோ வெளிநாடு செல்பவர்களைப் பற்றிய படம் இதுவல்ல. உள்நாட்டில் பிழைக்க வழி இல்லாமல் வெளிநாடுகளுக்கு சம்பாத்தியத்துக்காகச் சென்று தொழிலாளிகள் படும் இன்னல்களைப் பற்றிய கதை.

இயக்குனராகவும், நாயகனாகவும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில்…

Read More

விருந்து திரைப்பட விமர்சனம்

by by Aug 31, 2024 0

சஸ்பென்ஸ் த்ரில்லர் போல ஆரம்பித்து சமூகத்துக்குச் செய்தி சொல்லி முடியும் படம். இதனை எல்லா கரம் மசாலாக்களும் சேர்த்து ஒரு கமர்சியல் விருந்தாக அளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன்.

தொழிலதிபர் முகேஷ், மர்ம மனிதர்களால் கடத்தப்படுகிறார். பின்னர் இறந்து போன அவரது சடலம் கிடைக்கிறது. தொடர்ந்து அவரது மனைவியும் விபத்தொன்றில் படுகொலை செய்யப்படுகிறார். இப்போது மீதம் இருப்பது அவர்களது மகள் நிக்கி கல்ராணி மட்டுமே. அவரையும் குறி வைக்கிறது அந்த மர்ம கும்பல். 

இன்னொரு பக்கம் ஆட்டோ…

Read More

செம்பியன் மாதேவி திரைப்பட விமர்சனம்

by by Aug 30, 2024 0

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் வீட்டு சாதியினரை காதலித்தால் அதை நாடக காதல் என்று வர்ணிக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை காதலிப்பதால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனுக்கு நேர்ந்த கதி என்ன என்று சொல்லும் படம் இது.

சாதி மாற்றுக் காதலால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட, அவரது தங்கையும், நாயகியுமான அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார்.

வழக்கம்போல் ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில்…

Read More

வாழை திரைப்பட விமர்சனம்

by by Aug 23, 2024 0

விளையும் பொருள்கள் முதற்கொண்டு உற்பத்திப் பொருள்கள் வரை அவற்றின் முதலாளிகள் காலடியில் உழைப்பாளிகள் என்றும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். 

இந்த அவலமான உண்மையைத் தன் வாழ்க்கை அனுபவமாகவே வாழைத்தோட்டத்தில் வைத்துக் கண்ணீர் காவியமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். 

வாழைத் தோட்டத்தில் காய் சுமக்கும் கூலி வேலைக்கு போகும் மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறார் அவர். 

படத்தின் நாயகன் பதின் பருவம்தொட்ட பதின்மூன்று வயது பொன்வேல்தான். அவனது வாழ்வின் ஒரு பகுதிதான் கதையாகக் காட்டப்படுகிறது. 

பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்து…

Read More