April 30, 2024
  • April 30, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

இன் கார் திரைப்பட விமர்சனம்

by by Mar 4, 2023 0

அன்றாடம் செய்தித்தாள்களில் யாரோ ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. 

ஒன்றல்ல… ஜென்டில்மேன்..! இந்தியாவெங்கும் ஒரு நாளில் இப்படி பாலியல் பலாத்காரத்துக்காக 100 பெண்கள் கடத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஒவ்வொரு வருடமும் 36 ஆயிரம் பேர்.

நெஞ்சு அடைகிறதா..? இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் கடத்தினார்கள் கற்பழித்தார்கள் என்பதுடன் அந்த செய்தியை நாம் கடந்து விடுகிறோம். ஆனால் பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு முன் எத்தனை மணி நேரம் எத்தனை…

Read More

அயோத்தி திரைப்பட விமர்சனம்

by by Mar 3, 2023 0

அயோத்தி என்கிற தலைப்பைக் கேட்டதும் “ஏதோ பிரச்சனையைக் கிளப்புறாங்கப்பா..!” என்றுதான் தோன்றியது. ஆனால் படம் பார்த்து முடியும்போது கண்களில் துளிர்த்துக் கிளம்பிய கண்ணீர் அப்படியான எண்ணத்தைத் துடைத்தே இறங்கியது.

அயோத்தியில் ஆரம்பிக்கிற கதை. அங்கே மத நம்பிக்கை மற்றும் ஆண் ஆதிக்கத்தில் ஊறிப்போன பல்ராம் (யஷ்பால் சர்மா) தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அன்பே உருவான அவரது மனைவி ‘இம்’மென்றால் அடி, ஏனென்றால் ‘இடி’ என்றே ஷர்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.

கல்லூரிக்குப் போகக்கூடாது என்கிற அவரது கட்டளையை மீறி…

Read More

அரியவன் திரைப்பட விமர்சனம்

by by Mar 3, 2023 0

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்..!” இதுதான் படத்தின் மையக்கரு. இதை நாம் நன்கறிந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை ஒத்த ஒரு சம்பவத்துடன் சம்ஹாரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மித்ரன்.ஆர்.ஜவஹர்.

கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய, அதை ஒருவன் வீடியோ எடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அதற்குப் பின்னால் பெண்களை இப்படி வயப்படுத்தும் ஒரு கும்பலே இயங்கி வருவதும் காட்சிப்படுத்தப்படுகிறது.

இதற்கு நேர் எதிர் மறையாக கபடி விளையாட்டு வீரராக நாயகன் இஷான் அறிமுகம் ஆகிறார்….

Read More

தக்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Feb 27, 2023 0

சிறைப்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிக்கும் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. தமிழிலும் சில படங்கள் இப்படி வந்திருக்கின்றன.

அப்படி மலையாளத்தில ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான படத்தின் தழுவலான கதை அமைப்பைக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் நடன இயக்குனராக நாம் அறிந்த பிருந்தா.

இந்தப் படத்தில் சிறப்பம்சமே பிரபல விநியோகஸ்ரும் தயாரிப்பாளருமான ஷிபு தமீன்ஸ் மகனான ஹிருது ஹாரூன் இதில் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பதுதான். எனவே அவரது வயதுக்கும் ஆற்றலுக்கும் தோதாக இப்படி ஒரு கதையை பிடித்திருக்கிறார்…

Read More

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்பட விமர்சனம்

by by Feb 26, 2023 0

சினிமா சொல்லும் அறிவியலில் ரோபோ காதலித்தாயிற்று. ஆண்ட்ராய்டு ரோபோ ஏவிய வேலையை செய்வதற்கு ஆயிற்று. இந்தப் படத்தில் இனி அடுத்து உலகை ஆளப்போகும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்சை வைத்து ஒரு கற்பனைக் கதையைப் படைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என்.

ஆனால் அதை சீரியஸாகவெல்லாம் கொண்டு போகாமல் காமெடியாக சொல்ல வேண்டும் என்று அவர் முடிவு எடுத்து இருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். 

அதற்குத் தோதாக அகில உலக சூப்பர் ஸ்டார் ஷிவாவும் கிடைக்க அதகளம் ஆரம்பமாகிறது.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை ஒரு…

Read More

வெள்ளிமலை திரைப்பட விமர்சனம்

by by Feb 24, 2023 0

வழக்கமான எந்த சினிமா இலக்கணங்களுக்குள்ளும் இல்லாமல் ஒரு சினிமா எடுத்துக்காட்டி விட வேண்டும் என்கிற ஆவலில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ‘ஓம் விஜய்’ என்பது புரிகிறது.

எந்தப் பெரிய நட்சத்திரத்தின் பின்னாலும் போகவில்லை அவர். மாறாக படங்களில் சிறிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சூப்பர் குட் சுப்பிரமணியை இந்தப் படத்தைத் தாங்கிச் செல்லும் பிரதான பாத்திரமாகவே படைத்திருக்கிறார்.

கதாநாயகன் என்று ஒரு பாத்திரம் இல்லாமல் கதையே நாயகனாகி படத்தைத் தாங்கி செல்கிறது. முழுதும் சூப்பர்ஹிட் சுப்பிரமணியின் முதுகிலேயே…

Read More

பகாசூரன் திரைப்பட விமர்சனம்

by by Feb 20, 2023 0

தன் முந்தைய இரண்டு படங்களின் மூலம் பரபரப்பைக் கிளம்பிய மோகன் ஜி இயக்கியிருக்கும் படம் இது என்பதாலும், செல்வராகவன் கதை நாயகனாக நடித்திருக்கும் காரணத்தாலும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது.

ஆனால், இன உணர்வைத் தூக்கிப் பிடிக்கும் வழக்கமான அவரது பாதையில் இருந்து விலகி பொதுவான சமுதாயக் கண்ணோட்டத்தில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அவர்.

ஆரம்பக் காட்சியே முழு வீச்சில் தொடங்குகிறது. ஒரு இளம் பெண்ணை நடுத்தர வயதுள்ள மனிதர் காட்டுக்குள் கொண்டு வந்து பாலியல் உறவுக்கு…

Read More

வாத்தி திரைப்பட விமர்சனம்

by by Feb 18, 2023 0

எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டிய கல்வி, எப்படி தனியார் முதலாளிகளிடம் சிக்கி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்று ஆகிப்போனது என்பதைச் சொல்லி இருக்கும் படம். 

படத்தின் தொடக்கம் மிக அற்புதமாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பொறியாளராக விரும்பும் ஒரு மாணனின் தந்தை அவன் கல்விச் செலவுக்காக அவர்களுடைய வீடியோ கடையை விற்கப் போக, அங்கு கிடைக்கும் ஒரு வீடியோ கேசட்டின் மூலம் திறமை மிக்க ஒரு கணக்கு வாத்தியாரைப் பற்றி அந்த மாணவனால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அவரைப்…

Read More

வர்ணாஸ்ரமம் திரைப்பட விமர்சனம்

by by Feb 11, 2023 0

படத்தின் தலைப்பபே கதையைச் சொல்லிவிடும். சாதிப்பிரச்சினைதான் கதையின் அடிநாதம். அதிலும் ஆணவக் கொலையை முன்னிறுத்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சுகுமார் அழகர்சாமி.

படத்தின் தொடக்கத்தில் நான்கு ஜோடி காதல் கதைகளுக்கான சான்றுகள் காட்டப்படுகின்றன. அந்த கதைகள் என்ன ஆயின… எப்படி முடிந்தன என்பதுதான் படத்தின் கதை.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து வரும் ஆணவக் கொலைகள் பற்றி ஆன்லைன் மூலம் அறிந்த அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டே, இந்தியா வந்து அவற்றைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்து மக்களிடையே விழிப்புணர்வு…

Read More

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட விமர்சனம்

by by Feb 2, 2023 0

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் இருந்து போதிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கம் பெரும்பாலும் ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவது பரிதாபத்திற்குரிய விஷயம்.

அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு ஒரு சவுக்கடி கொடுத்த காரணத்தினாலேயே மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன் ‘ வெற்றி பெற்றது.

அங்கே சமைத்த அந்த உண(ர்)வு நீர்த்துப் போகாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

மூலத்தின்…

Read More