அதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது.
முக்கியமாக மராட்டியம்், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் மிரட்டலில் எனக்கு பயம் இல்லை – கமல்
கோவையில் செய்தியாளர்களிடம் கமல் சொன்னது:
”தேர்தலை முன்னிட்டு ஊடகங்களை, குறிப்பாக எதிர்க்கட்சி ஊடகங்களைக்கூட நாங்கள் சாதகமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. மாறாக இதில் எந்த சூழ்ச்சியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது எல்லோருக்குமான ஜனநாயகம் என்பதால், இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
நான் அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தை ஏற்கெனவே ஓரளவு சொல்லிவிட்டேன். வரலாறு என்னை இங்கே களத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. என் வேலை உண்டு, எனது கலை உண்டு என்றிருந்தேன். எனது தேவை அரசியலுக்குத் தேவையா என…
Read More
நாங்கள் மாற்று அரசியலை முன்னெடுப்பது ஏன்? – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்தில் தீய ஆட்சியை வழங்கியுள்ளன. அதிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி தூய அரசியலை முன்னெடுக்கவே நாம் தமிழர் கட்சி உருவானது.
இலவசங்களை கொடுத்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ளனர். இதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அதற்காக மாற்று அரசியலையே நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம்.
அரசு பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரிகள்…
Read More
அரசியலுக்கு வந்ததால் 300 கோடியை இழந்தேன் – கமல்ஹாசன்
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு அணிக்கு தலைமை தாங்குகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார்.
அதற்காக கோவை தொடங்கி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம்…
Read More
சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் உதயநிதி போட்டியிடும் தொகுதிகள்
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்களை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இங்கு…
கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்
சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்
துறைமுகம்-சேகர் பாபு
தி.நகர்-ஜெ.கருணாநிதி
ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன்
ஆவடி-நாசர்
மாதவரம்-சுதர்சனம்
மைலாப்பூர்-த.வேலு
ஆலந்தூர்-தா.மோ.அன்பரசன்
ஒரத்தநாடு-ராமச்சந்திரன்
தஞ்சை-நீலமேகம்
திருச்சி மேற்கு-கே.என்.நேரு
காட்பாடி- துரைமுருகன்
காஞ்சிபுரம்-எழிலரசன்
உத்திரமேரூர்-சுந்தர்
செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன்
செஞ்சி -மஸ்தான்
விக்கிரவாண்டி-புகழேந்தி
திருக்கோவிலூர்- பொன்முடி
திருவண்ணாமலை-எ.வ.வேலு
எடப்பாடி- சம்பத்குமார்
பாலக்கோடு-பி.கே.முருகன்
விராலிமலை- எம்.பழனியப்பன்
கரூர்-செந்தில்பாலாஜி
நாகர்கோவில் -சுரேஷ்ராஜன்
ராதாபுரம்-அப்பாவு
அம்பாசமுத்திரம்-ஆவுடையப்பன்
திருநெல்வேலி-லட்சுமணன்
திருசெந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி- கீதா ஜீவன்
ஆலங்குளம்- பூங்கோதை
ஒட்டப்பிடாரம்-சண்முகைய்யா
திருச்சுழி- தங்கம் தென்னரசு
ராமநாதபுரம்- காதர் பாட்சா
திருமயம்-ரகுபதி
போடி- தங்க தமிழ்ச்செல்வன்
ஆண்டிப்பட்டி- மகராஜன்
முதுகுளத்தூர்- ராஜகண்ணப்பன்
கம்பம்-ராமகிருஷ்ணன்
பட்டுக்கோட்டை- அண்ணாதுரை
சமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
சமையல் எரிவாயுவின் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்ட தற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது….
“சமையல் எரிவாயு ஒரு உருளையின் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை மூன்றாவது முறையாக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல.
சமையல் எரிவாயு விலை கடந்த 21 நாட்களில் மட்டும் ரூ.100 உயர்ந்திருக்கிறது. கடந்த 4-ந்தேதி சமையல்…
Read More
எம் ஜி ஆர் இருமுறை வென்ற ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டி
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் போட்டியிடுவதற்காக மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் தீவிரமாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் விளைவாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளை பெற்ற ஶ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் வரும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 22 ஆயிரம் ஓட்டுகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்துள்ளது.
ஆலந்தூர்…
Read More
மநீம சார்பில் தேர்தலில் போட்டியிட 21 முதல் விருப்ப மனு பெறப்படும் – கமல் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் வாரிசு அரசியல் கிடையாது – கமல்
11 பிப்ரவரி 2021 அன்று சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
1. ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டும் எனும் லட்சியத்திற்காக அயராது பாடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் உடலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் நிறைவு செய்துள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சார்பாகவும் தொண்டர்கள் சார்பாகவும் மனப்பூர்வமான…
Read More
நாட்டிலேயே நிர்வாகத்திறன் மிகுந்த தமிழ்நாடு – கவர்னர் உரையில் புகழாரம்
தமிழக சட்டசபை 2021-ம் ஆண்டின் தமிழக முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன் தொடக்க உரையில் கூறியதிலிருந்து…
கொரோனா பெருந்தொற்று மீட்புப் பணிகளில் அயராது உழைத்த சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் அனைத்து குடிமக்களுக்கும் இத்தருணத்தில் எனது…
Read More