September 15, 2026
  • September 15, 2026
Breaking News
January 21, 2021

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது

By 0 776 Views
பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல்  ஏற்படவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டதில் தொற்று இல்லை என முடிவு வந்தது.
 
இருந்தும் அங்கு சிடி ஸ்கேன் உள்பட வசதிகள் இல்லாததால் சசிகலா அங்கிருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இன்று மாலை 6.30 மணி அளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கையில்….
 
 ‘‘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது. நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது…” என்று தெரிவிக்கப்பட்டது.
 
பரிசோதனைகள் நடந்த விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.