April 20, 2024
  • April 20, 2024
Breaking News

Currently browsing அரசியல்

கொரோனா வார்டு கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர் – வைரல் வீடியோ

by by Aug 30, 2020 0

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர். அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல்…

Read More

Breaking News விஜய் ரசிகர்கள் மீதான அமைச்சர் செல்லூர் ராஜுவின் விமர்சனம்

by by Aug 29, 2020 0

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு.

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் – மத்திய அரசு.

மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை – மத்திய அரசு.

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என உத்தரவு…

Read More

கொரோனா சிகிச்சையில் இருந்த எம் பி வசந்தகுமார் (வசந்த் அன் கோ நிறுவனர்) காலமானார்

by by Aug 28, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
 
அதன் காரணமாக சில எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
 
அப்படி கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் தன் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
 
வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் நிறுவனர் ஆகவும் அவர் இருந்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். அத்துடன்…

Read More

இ பாஸ் இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்று அறிய முடியும் – முதல்வர்

by by Aug 27, 2020 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது…

தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதுடன் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன.

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் கடலூரில் 9 ,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன..! ”  என்றார்.

அதன் பின்னர்…

Read More

தமிழகத்தில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்கள் திறப்பு இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

by by Aug 25, 2020 0

கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வு களில் இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
 
வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தெரிகிறது. 
 
இந்நிலையில் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
 
இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை.
 
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இயல்பு…

Read More

மக்களுக்கான நீதி இன்று உறுதியானது – ஸ்டெர்லைட் தீர்ப்பு பற்றி கமல்

by by Aug 18, 2020 0

மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால், வல்லரசுகளும் தலைவணங்கித்தான் தீர வேண்டுமென நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது.

ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்குமுறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது.

போராட்டக்களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள்.

இந்த தீர்ப்பு கொண்டாடக்கூடிய ஒன்று என்றாலும், இன்னும் அந்தப் போர் முடிந்து விடவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, தன் பயங்கரவாத…

Read More

சென்னை மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

by by Aug 16, 2020 0

கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படாமல் இருந்தன.
 
அதன்பின் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து சென்னை மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
 
இது சென்னையில் உள்ள மது பிரியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி  இருந்தது. ஆனால், சென்னையில் வைரஸ் தொற்று அதிகமாக இருந்ததால் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப் படாமலேயே இத்தனை நாள் இருந்தது.
 
இந்நிலையில்  நாளை மறுதினத்தில் (ஆகஸ்ட் 18) முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக்…

Read More

தமிழ்நாட்டுக்குள் செல்ல விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் – முதல்வர் உத்தரவு

by by Aug 14, 2020 0

முக்கியப் பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறும் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த்…

Read More

எஸ்வி சேகருக்கு சிறை செல்லும் ஆசை இருந்தால் அரசு நிறைவேற்றும் – அமைச்சர் ஜெயக்குமார்

by by Aug 12, 2020 0

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில்  இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அஇஅதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்து கூறிவருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், “இது அவரவர்களின் சொந்தக் கருத்து என்றும் கட்சியின் கருத்து அல்ல என்றும் கூறினார். எனினும், இது போன்று பொது வெளியில் கருத்துத் தெரிவிப்பது கட்சியைப் பலவீனப்படுத்தும் … ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அஇஅதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலைச் சின்னம் என்ற மூன்று தாரக மந்திரங்களை…

Read More

அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம்

by by Aug 9, 2020 0

கொரோனாவால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மருத்துவ கண்காணிப்புக்காக ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அடுத்த வாரம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது ; அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டத்தில், வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்பு பெட்டகம் ரூ.2,500-க்கு வழங்கப்படும்.

அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத்…

Read More