April 27, 2024
  • April 27, 2024
Breaking News

Currently browsing அரசியல்

எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முதல்வர் அறிவிப்பு

by by Jun 16, 2020 0

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
 
இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அதில் ஒருவர் ராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர். பழனியின் வீர மரணத்திற்கு ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
 
தெலங்கானா ஆளுநர தமிழிசை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன் உள்ளிட்டோரும இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில்…

Read More

மீண்டும் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா? – முதல்வர் விளக்கம்

by by Jun 12, 2020 0

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் பேசிய போது வெகுவகமாக நோய்த் தொற்று பரவி வருமவதால் மீண்டும் சென்னையில் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தினார்.

“சென்னையில்  மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் வீரியத்தை…

Read More

தலைவரை உலுக்கி எடுத்த அன்பு அண்ணனின் மரணம் – உதயநிதி உருக்கம்

by by Jun 11, 2020 0

 திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நேற்று மரணம் அடைந்த நிலையில் அது தொடர்பான உருக்கமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

அதன் விவரம் பின்வருமாறு;

”எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் அந்தவகை. ஏனெனில் அண்ணன் அப்படிப்பட்ட மனிதர்.

எனக்கே இப்படியென்றால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இணைந்து பயணித்த தலைவர் அவர்கள் எப்படித் துடிக்கிறார் என்பதை…

Read More

மறைந்த எம்எல்ஏ அன்பழகன் கொரோனா பற்றி பேசிய வீடியோ

by by Jun 10, 2020 0

Read More

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் – மத்திய அமைச்சர் விளக்கம்

by by Jun 3, 2020 0

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள

9,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வந்ததாக கூறினார்.

குறிப்பாக மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா அச்சத்தால் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் பூட்டப்பட்டு விட்டதாகவும் அவர்…

Read More

ரஜினி கார்த்திகை மாதம் புதிய கட்சியை அறிவிப்பார் – ரஜினி அண்ணன் சத்யநாராயணா

by by May 29, 2020 0

ரஜினி அரசியலுக்கு வெகு விரைவில் வருவார் என அவரது அண்ணன் சத்திய நாராயணா மீண்டும் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்கள் விருப்பமாகும். இது தொடர்பாக அவர் தன் ரசிகர்களுடனும், தனது நல விரும்பிகளான நண்பர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது முதல் சுற்று ஆலோசனையை அவர் முடித்துள்ளார்.

ஜூலை மாதம்
மீண்டும் ரசிகர்களை சந்தித்து இரண்டாம் சுற்று ஆலோசனை நடத்தவுள்ளார். அவரது ரசிகர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அவரை…

Read More

பொது முடக்கம் மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படுமா?

by by May 26, 2020 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ஒவ்வொரு ஊடரங்கு காலம் முடிவதற்கு முன் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை பெற்று அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். 
 
ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை முழுவதுமாக தளர்த்தக்கூடாது. படிப்படியாக தளர்த்த வேண்டும். சென்னையில் எந்த தளர்வும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியது. அதேபோன்றுதான் தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்தது.
 
4-வது ஊரடங்கு காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
 
அப்போது…

Read More

கேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்

by by May 25, 2020 0

கேரளாவில் ஷூட்டிங்-க்காகப் போடப்பட்டிருந்த சர்ச் செட்-டை சில வலது சாரி அமைப்புகள் சேர்ந்து இடித்துத் தள்ளிவிட… விஷயம் சி எம் கவனத்துக்குப்போய் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘மின்னல் முரளி’ என்ற படத்துக்காக கேரளாவின் காலடி பகுதியில், பெரியார் ஆற்றங்கரையில், உரிய அனுமதி பெற்ற பின் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

  ஆனால்,  இந்த அரங்குக்கு எதிரிலே மகாதேவன் கோயில் இருந்ததால், இந்த சர்ச் அமைப்பதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு…

Read More

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்கள் விபரம்

by by May 17, 2020 0

இந்தியா முழுவதும் வரும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் மே 31 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
 
அத்துடன் இதுவரை அறிவிக்கப் பட்டுள்ள தளர்வுகள் தவிர்த்து 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.
 
அந்த 25 மாவட்டங்கள் வருமாறு…
 
கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி,…

Read More

தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி – கமல் கடும் தாக்கு

by by May 14, 2020 0

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் மே 7ஆம் தேதி தமிழக அரசு. டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது.

மாநிலம் முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்த்துடன் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

இதன் விளைவாக டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட, இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறை செய்துள்ளது தமிழக அரசு.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரும நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்…

Read More