February 7, 2025
  • February 7, 2025
Breaking News

Currently browsing அரசியல்

காவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

by by May 1, 2018 0

காவிரி டெல்டா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

“தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு, மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்க திட்டங்களைப் புகுத்தி காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

தற்போது காவிரிப் படுகை நிலப்பகுதிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படையினரை…

Read More

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் முதல்வர்

by by Apr 30, 2018 0

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதி மன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதற்கு இன்னும் மூன்று நாட்களே…

Read More

பிரதமர் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் – நாராயணசாமி

by by Apr 28, 2018 0

தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று கூறிய தீர்ப்பு பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளிலிருந்து…

“இங்கு சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே பிரச்சினையில் இரண்டு விதமான தீர்ப்பு வந்திருப்பதற்கு மக்கள் மன்றம்தான் பதில்…

Read More

திமுக ஆட்சி அமைந்ததும் குட்கா குற்றவாளிகளை தண்டிப்போம் – ஸ்டாலின்

by by Apr 27, 2018 0

தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்பனையில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றை அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதிலிருந்து…

“கொடுமையான புற்றுநோய் வருவதற்கு குட்கா தொடர்பான போதைப்பொருட்களே காரணம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், இப்போது நடைபெறும் அ.தி. மு.க. ஆட்சியிலும் தடைச்செய்யப்பட்ட…

Read More

கர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்

by by Apr 25, 2018 0

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இப்போது காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி என்று அனைத்து கட்சிகளின் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைய உள்ளது.

முன்னதக இந்தத் தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத தொங்கு பாராளுமன்றம் அமையவே சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பா.ஜ.க.வின் வெற்றியை உறுதிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்படி…

Read More

எஸ்.வி.சேகர் பதிவு மன்னிக்க முடியாத குற்றம்-ரஜினி

by by Apr 23, 2018 0

உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பற்றிய கேள்விக்கு, “ஐபிஎல் போராட்டத்தின்போது சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் கையில் இருக்கிறதென்று வரம்பு மீறக்கூடாது..!” என்றார்.

அவர் கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்டபோது, “நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், நான் இன்னும் உறுதியாகவில்லை..!” என்றார்.

பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் எஸ்.வி.சேகரின் பெண் பத்திரிகையாளர்…

Read More

நியூட்ரினோ – முதல்வருக்கு வைகோ எச்சரிக்கை

by by Apr 1, 2018 0

மதுரையில் ‘நியூட்ரினோ’ திட்டத்துக்கு எதிரான நடைப்பயணம் வைகோ தலைமையில் நேற்று துவங்கியது.

அந்தப் பயணத்தை தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். அப்போது வைகோ பேசியதிலிருந்து-

“நியூட்ரினோ’ திட்டத்துக்காக தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் கடும் பாறையை தகர்த்து காந்தக்கல் வைக்க 1,000 டன் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தவுள்ளன. இது நிறைவேறினால் முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணை உடையும். தமிழகம் பாலைவனமாகும்.

இத்திட்டம் நிறைவேற மக்கள் கருத்து தேவையில்லை என மத்திய அரசு…

Read More

கருணாநிதியை சந்திக்க மம்தா சென்னை வருகிறார்

by by Mar 30, 2018 0

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இரண்டுநாள் பயணமாக ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் சென்னை வர இருக்கிறார்..

அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதியையும், செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்த அணியில் இடம்பெறவும் தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மம்தா சென்னை வர இருப்பதும், தி.மு.க. தலைவர்களைச் சந்திக்க இருப்பதும்…

Read More

மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு இந்தியா எச்சரிக்கை..!

by by Mar 21, 2018 0

உலகம் முழுதும் சமூக வலை தளங்களில் முன்னணியில் இருக்கும் ‘மார்க் ஜூக்கர்பெர்க்’கின், ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. அது விபரம் –

ஃபேஸ் புக் பயனர்களில் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு அது ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. அந்த விவரங்கள்…

Read More

2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..!

சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்ததன் அடிப்படையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சி.பி.ஐ கோர்ட் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி சைனி, சி.பி.ஐ போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை எனக்கூறி ஆ.ராசா, கனிமொழியுடன் குற்றம்சாட்டப்பட்ட 17…

Read More