November 28, 2023
  • November 28, 2023
Breaking News
March 19, 2018

முதல்ல செக்கப்… அப்புறம் பிக்கப்… ரஜினி திட்டம்..!

By 0 807 Views

அரசியல் களமிறங்கும் ரஜினி இங்கே தனது மக்கள் மன்றத்துக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளை முடுக்கிவிட்டு தன் உள்ளத்தைத் தூய்மை செய்து கொள்வதற்காக இமயமலை சென்றிருக்கிறார்.

இந்தப் பயணத்தின் குறுக்கே அரசியல் பேசுவதில்லை என்று அவர் உறுதி கொண்டிருந்தாலும் அவரை யாரும் விடுவதாயில்லை.

இந்த ஆன்மிகப் பயணம் முடிந்தபின் அவர் முழு உடல் தகுதி பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்வதாக இருக்கிறார் என்கிறது தகவல் வட்டாரம். ஏற்கனவே அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துமனைக்குச் செல்ல இருக்கிறாராம்.

உள்ளமும், உடலும் தூய்மை பெற்றபின் அப்புறம்… கட்சி, கொடி என்று அரசியல் பிக்கப்தான் என்கிறார்கள் அவரது உடன் உறைபவர்கள்..!

“கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு… காலத்தின் கையில் அது இருக்கு…” ஏன்று பாடியவருக்கு இப்போது காலம் கனிந்து விட்டது..!