April 19, 2024
  • April 19, 2024
Breaking News

Currently browsing தமிழ்நாடு

அநீதி இழைக்கப்பட்ட நீட் மாணவர்களுக்கு நீதி கிடைத்தது- மார்க்சிஸ்ட் மகிழ்ச்சி

by by Jul 10, 2018 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 
2018, ஜூலை 10-11 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன்  தலைமையில் நடைபெறுகிறது.
 
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முதல்நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் நீட்…

Read More

தொகுதிக்குள் செல்லும் அன்புமணி ராமதாஸை அரசு தடுக்க முடியாது – ஐகோர்ட் கருத்து

by by Jul 7, 2018 0

சென்னை -சேலம் பசுமைச்சாலை அமைக்க, பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தன் தொகுதியில் உள்ள மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்ள, கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால், அவருக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து பா.ம.க. துணை…

Read More

8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் போராட்டம்

by by Jul 2, 2018 0

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்க, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 8 வழிச்சாலை அமைப்பது அவசியம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.

பழனியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவரது பேச்சிலிருந்து…

“அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம் போல சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.. எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். ஆனால், இதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.

8 வழிச்சாலை…

Read More

கர்நாடகாவின் புதிய செயல்பாடு குறித்து விவாதிக்க முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை

by by Jun 30, 2018 0

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேர் நியமிக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி இன்று அழைப்பு விடுத்தார்.

குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற…

Read More

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாரூர் ஏரியில் நீர் திறப்பு – முதல்வர்

by by Jun 28, 2018 0

பாரூர் ஏரியில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறப்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து…

“கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அதை ஏற்று போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக …

Read More

ஸ்ரீரங்கம் சென்றால் மட்டும் சிஎம் ஆக முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

by by Jun 27, 2018 0

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்வுக்கு ஸ்ரீ ரங்கம் சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு அரங்கநாத சுவாமி கோவில் வாசலில் அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதுபற்றி பிற கட்சிப் பிரமுகர்களும், வலை தளங்களிலும் பலவாறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஸ்டாலின் கோவிலுக்குச் செல்லவில்லை எனவும், அவர்களாக முன்வந்து அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார் எனவும் திமுக தரப்பில் சொல்லப்படும் நிலையில் இன்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் மு.க.ஸ்டாலின்…

Read More

100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் – முதல்வர்

by by Jun 24, 2018 0

சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர்.

ஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து…

“சென்னை – சேலம் விரைவு…

Read More

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்

by by Jun 22, 2018 0

தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், நேற்று காலையில் சோனியா காந்தியை சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுகளாக அமைந்தன.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துச் செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்களால் மேற்படி சந்திப்புகள் கருதப்பட, டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து…

“ராகுல் காந்தி, சோனியா இருவரையும் மரியாதை நிமித்தமாகவே…

Read More

மத்திய அமைச்சரைத் தொடர்ந்து மாநில அமைச்சர் இல்ல நிகழ்வில் எஸ்.வி.சேகர்

by by Jun 18, 2018 0

பெண் பத்திரிகயாளர்களைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதற்காக ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளான எஸ்.வி.சேகரைப் பற்றிப் போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் சில நாள்கள் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தார்.

அதன்பின் சென்னைக்கு வந்தவர் பல இடங்களில் தலைகாட்டி வருகிறார். இருந்தும் அவரைப் போலீஸ் இன்னும் கைது செய்யாமலிருப்பதற்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சில வாரங்களுக்கு முன் எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஒரு…

Read More

மிக விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் – முக ஸ்டாலின்

by by Jun 17, 2018 0

நேற்று சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர்.காலனியில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கல்ந்துகொண்ட தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…

“கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் நாம் கொண்டாடவில்லை. தமிழகத்தைத தாண்டி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில்… கடல் கடந்து எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கு எல்லாம் கொண்டாடப்படுகிறது.

அதற்குக் காரணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் எங்கும்…

Read More