July 11, 2025
  • July 11, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்
September 7, 2018

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

By 0 1091 Views

அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி விமான நிலையத்தில் இன்று (07-09-2018) பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதிலிருந்து…

குட்கா ஊழல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், “எங்களுக்கு மடியில் கனமில்லை… வழியில் பயமில்லை…” என்று கூறியிருக்கிறார். இது ஆரம்ப கட்ட விசாரணை என்பதால் அவர் ராஜினாமா செய்ய அவசியமில்லை.

மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

ராஜுவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கருத்துக்கு வலு சேர்க்கும் அளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்ட வல்லுனர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. மத்தியிலும் , மாநிலத்திலும் அதிக அதிகார பலத்தோடு இருந்தபோது அவர்களது விடுதலையை உறுதிப்படுத்தவில்லை..!”