October 10, 2024
  • October 10, 2024
Breaking News
July 15, 2018

2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்த தினகரன்

By 0 967 Views

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளரரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் விபரம்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சியை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்குக் காரில் புறப்பட்டு சென்றார்.

வழியில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அப்போது தினகரன் பேசியதிலிருந்து…

“இப்போது தமிழகத்தில் நடந்து வரும் துரோக ஆட்சிக்கு கரு உள்ள முட்டையின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. துரோகத்தை கருவறுக்க வேண்டும் என்பார்கள். அதனால், விரைவில் இந்த துரோக ஆட்சி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும். அப்போது சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மனோகரன் போட்டியிடுவார்.

அரசு தலைமை கொறடாவாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர் அவர். அதனால் அவரை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்..!”