October 19, 2025
  • October 19, 2025

விஜய் சேதுபதியும் ஆக்‌ஷனுக்குள் இறங்குகிறார்

by on April 24, 2018 0

விஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்‌ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதே நிறுவனங்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகிறார்கள். விஜய்சேதுபதி நடித்த படங்களிலே இந்தப்படம் பிரமாண்டமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும்.தயாராகிறதாம். இதில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்க ஒரு முக்கியமான […]

Read More

கிடு கிடுவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

by on April 24, 2018 0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாதத்திற்கு இரண்டு முறை இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த பழைய சிஸ்டத்தை மாற்றி, சென்ற ஆண்டு ஜூனில் இருந்து தினந்தோறும் விலையை நிர்ணயிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாகக் கண்ணுக்குத் தெரியாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதன் அடிப்படையில் இன்று பெட்ரோல் விலை இதுவரை […]

Read More

மே 3 முதல் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு

by on April 24, 2018 0

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக “மே 3 முதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்ய முடியும்..!” என்றார். மேலும் அவர் கூறியது… தமிழகத்தில் கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் 152704 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மொத்த காலி இடங்கள் மே 15ல் தெரியும். இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானதும் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கும். பொறியியல் படிப்புக்காக இணையதளங்களில் […]

Read More

எஸ்.வி.சேகர் பதிவு மன்னிக்க முடியாத குற்றம்-ரஜினி

by on April 23, 2018 0

உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பற்றிய கேள்விக்கு, “ஐபிஎல் போராட்டத்தின்போது சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் கையில் இருக்கிறதென்று வரம்பு மீறக்கூடாது..!” என்றார். அவர் கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்டபோது, “நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், நான் இன்னும் உறுதியாகவில்லை..!” என்றார். பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் எஸ்.வி.சேகரின் […]

Read More

என் காதல் பதட்டத்தைப் போக்கினார் விஜய் ஆண்டனி – காளி அம்ரிதா

by on April 3, 2018 0

‘படை வீரன்’ அம்ரிதாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அவரது அட்டகாச நடிப்பைப் பார்த்தவுடன் அவர் கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றும். கேட்டால், “என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். நான் பி காம் பட்டதாரி. சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்தது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பைப் பெற்று தந்தது” என்கிறார் அம்ரிதா. இப்போது விரைவில் வெளியாக இருக்கும் […]

Read More

நியூட்ரினோ – முதல்வருக்கு வைகோ எச்சரிக்கை

by on April 1, 2018 0

மதுரையில் ‘நியூட்ரினோ’ திட்டத்துக்கு எதிரான நடைப்பயணம் வைகோ தலைமையில் நேற்று துவங்கியது. அந்தப் பயணத்தை தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். அப்போது வைகோ பேசியதிலிருந்து- “நியூட்ரினோ’ திட்டத்துக்காக தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் கடும் பாறையை தகர்த்து காந்தக்கல் வைக்க 1,000 டன் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தவுள்ளன. இது நிறைவேறினால் முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணை உடையும். தமிழகம் பாலைவனமாகும். இத்திட்டம் நிறைவேற மக்கள் கருத்து தேவையில்லை என […]

Read More

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை

by on April 1, 2018 0

கோவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளைப் போல் தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர் கூறியதாவது… “மத்திய அரசின் ‘நீட்’ தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் திறனுடன் சந்திக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுத்தேர்வு முடிந்தபின் மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு 4,000 மாணவர்களுக்குத் தனி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதல் […]

Read More

நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை – ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்

by on April 1, 2018 0

தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக 49-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மக்களின் பிரதிநியாக நானும் பங்கேற்பேன் என்று அறிவித்திருந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் இன்று போராட்டத்தில் பங்கேற்றார். அங்கு கமல் பேசியதிலிருந்து… “எனக்கென்று ஒரு கட்சி இருந்தாலும் தனி மனிதனாக இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கமல்ஹாசன். நடிகன் என்பதை விட நான் மனிதன் – நான் தமிழன். உங்களுககு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதி வியாபாரப் பேராசையின் […]

Read More
CLOSE
CLOSE