July 14, 2025
  • July 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தனி ஒருவன் 2 – கட்டாயத்துக்குள்ளான இயக்குநர் மோகன்ராஜா
August 28, 2018

தனி ஒருவன் 2 – கட்டாயத்துக்குள்ளான இயக்குநர் மோகன்ராஜா

By 0 963 Views

தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவத்தைத் தந்த ‘தனி ஒருவன்’ இன்று 3-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ‘ஹாஷ் டேக்’ ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாக தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறார்கள். ஆம், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ‘தனி ஒருவன் 2’ படம் மிகப்பெரிய கூட்டணியுடன் விரைவில் ஆரம்பமாகிறது.

இந்த உற்சாகமான தருணத்தைப் பற்றி இயக்குனர் மோகன் ராஜா கூறும்போது, “தனி ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்த ‘தனி ஒருவன் 2’ மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறேன்.

நாங்கள் ஏற்கனவே முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்களுடன் பேசி வருகிறோம். சமூக பின்னணியில் அமைக்கப்படிருக்கும் இந்த ‘தனி ஒருவன் 2’ கதையில், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் துரத்தல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்..!” என்றார்.

முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ஜெயம் ரவி ‘தனி ஒருவன் 2’ பாகத்திலும் நாயகனாகவே தொடர்கிறார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்பவும் ரெடிதான்..!