March 25, 2025
  • March 25, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சொத்துக்காக கொலை செய்யத் துணியும் சோனியா அகர்வால்
August 24, 2018

சொத்துக்காக கொலை செய்யத் துணியும் சோனியா அகர்வால்

By 0 1008 Views

‘7ஜி ரெயின்போ காலனி’ படம் வந்தபோது சோனியா அகர்வாலுக்கு அப்படி ஒரு கிரேஸ் இருந்தது. அப்படி ஒரு கதாநாயகியாக இருந்து விட்டு இப்போது வில்லியாகிவிட்டார் என்றால்… அதுதான் சினிமா..!

‘உன்னால் என்னால்’ என்ற படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கிறார். இந்தப் படத்தில்தான் சோனியா அகர்வால் வில்லியாகிறார்.

நீண்ட இடைவெளிக்குப்பின் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்ய, முகமது ரிஸ்வான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா.

படம் பற்றி அவர் கூறியதிலிருந்து…

“பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று. தேவைக்குப் பணம் சேர்த்தால் பரவாயில்லை. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத்தான் போக வேண்டும்.

மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் ராஜேஷை அவருக்கு காரியதரிசியாக இருக்கும் சோனியா அகர்வால் கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார் அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா மூவரும்.

இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் கதை. இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம். இதற்காக சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்.

உன்னால் என்னால் படம் வழக்கத்திலிருந்து வித்தியாசமான படமாக இருக்கும்..!

படத்தைக் காட்டுங்க சார்… பாத்துட்டு சொல்றோம்..!