August 15, 2026
  • August 15, 2026

வட சென்னை, சண்டக்கோழி 2 படங்களுடன் மோத வரும் எழுமின்

by on October 11, 2018 0

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் ‘எழுமின்’ படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், […]

Read More

ஆண் தேவதை சினிமா விமர்சனம்

by on October 11, 2018 0

ஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா. உலகத்தில் இப்படி நிறைய ஆண்தேவதைகள் இன்றைக்கும் வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அவர்களே வெளியில் சொல்ல வெட்கப்படும் சமுதாயச் சூழலில் அதை இலக்கியமாக்கிப் பெருமைப்படுத்தியதற்காக ஆண்களின் சார்பாக […]

Read More

சிம்பு படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை – தனுஷ்

by on October 10, 2018 0

“எப்படா வரும்..?” என்று ஆவலை ஏற்படுத்தும் படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’. அடுத்த வாரம் ரிலீஸ் என்கிற நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தது வட சென்னை டீம். கண்ணிலேயே பார்க்க முடியாத தனுஷ், ‘இதுக்குதான் காத்திருந்தேன்…’ என்ற அளவில் அத்தனை ஈடுபாட்டுடன் பேசினார். அவர் பேசியதிலிருந்து… “இந்தக் கதையை பொல்லாதவன் படத்துக்குப் பிறகு நானும், வெற்றிமாறனும் பேசினோம். ஆனா, பெரிசா ஆயிரம் கேரக்டர்களோட பண்ண வேண்டிய படம். அதனால அப்புறம் பண்ணலாம்னு ‘ஆடுகளம்’ பண்ணினோம். […]

Read More

விஷாலுக்கு சவால் விடும் வரலட்சுமி சரத்குமார்

by on October 10, 2018 0

தன் 25வது படமாக விஷால் நடித்துத் தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலுடன் இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் உற்சாகமாக இருக்கும் டீமில் வரலட்சுமி சரத்குமாரிடம் பேசியதிலிருந்து… “சண்டக்கோழி2 படத்தில் வேலை பார்க்கும் போது நிறைய சந்தோஷமான சூழலே இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். […]

Read More

தல ரசிகனின் கதையை இயக்கும் தாதா 87 இயக்குநர்

by on October 9, 2018 0

சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சீனியராகவும் அம்சன் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் […]

Read More

எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் – விஜய் சேதுபதி வாக்குமூலம்

by on October 9, 2018 0

‘ஆரண்ய காண்டம்’ என்றொரு படம். பாக்ஸ் ஆபீஸில் பெருத்த நஷ்டம். எனினும், விமர்சகர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதிலிருந்து எந்த நிகழ்வில் அந்தப்படம் திரையிட்டாலும் சரி, பெருத்த கூட்டம் கூடிவிடும். ரசிகர்கள் நின்று கொண்டே பார்க்கவும் தயங்காத வரவேற்பு பெற்ற படமானது. அதன் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’ இன்றளவும் சிறந்த இயக்குநர்கள் வரிசயில் வைத்துக் கொண்டாடப்படுகிறார். அவரது அடுத்த படம் பற்றி வருடக் கணக்கில் தகவல் இல்லாத நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை […]

Read More

கூத்தன் படம் பாருங்க… ஒரு பவுன் தங்கம் அள்ளுங்க..!

by on October 8, 2018 0

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நீல்கிரீஸ் முருகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதியதிரைப்படம் ‘கூத்தன்’.  இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமேநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வரும் 11 தேதி இப்படம்திரைக்கு வருகிறது.  சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி  பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆச்சர்யப்படுத்துகிறார்.  இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில்  படடிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன் நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும்.  தமிழகம் முழுதும்  அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.                                              

Read More
CLOSE
CLOSE