September 20, 2026
  • September 20, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

சர்கார் படத்துடன் கூடிய ஹர்பஜன் சிங்கின் தமிழ் தீபாவளி வாழ்த்து

by on November 6, 2018 0

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ரசனை பற்றியும் அவரது தமிழ் ட்வீட்டுகளையும் தமிழகம் நன்றாகவே அறியும். இந்நிலையில் இன்று இந்தியாவெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன். அதில் சர்க்கார் படத்தையும் சேர்த்துக்கொண்டு அதில் வாழ்த்தியிருப்பதுதான் ஹைலைட். அந்த ட்வீட் கீழே… #தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் […]

Read More

கமல் வெளியிட்ட விக்ரம் 56 படத்தின் முதல் பார்வை

by on November 6, 2018 0

நடிகர்களில் கமலைப் போன்ற அழகும், திறமையும் ஒருங்கே பெற்றவர் விக்ரம். கமலைப் போன்றே தன் கேரக்டர்களுக்காக உடலை இளைத்தும், பெருக்கியும் நடிப்பதிலும் கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம் பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இவர்கள் இருவரும் இணைந்தால் ஒரு அற்புதப்படம் கிடைக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் எண்ணமாக இருக்க, அப்படி ஒரு படமாக அமைகிறது ‘கடாரம் கொண்டான்’. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க, அக்ஷரா ஹாசன் அவருக்கு ஜோடியாகிறார். விக்ரமின் […]

Read More

ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி – கேலரி

by on November 6, 2018 0

இன்று தீபாவளித் திருநாளை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் வழக்கம்போல் போயஸ் கார்டனில் அவர் இல்லத்துக்கு வாழ்த்துப்பெற சென்றனர். இந்த வருடம் அவர் வீட்டில் இருந்ததால் ரசிக, ரசிகைகளை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக் கூறினார். அந்தப் புகைப்படங்கள் கீழே. அடுத்தடுத்து சொடுக்கிப் பாருங்கள்…  

Read More

சர்கார் பற்றி தமிழிசை தாக்கு – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

by on November 5, 2018 0

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சர்கார் பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றது. அதற்கு பதிலளித்த தமிழிசை, “யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு ‘கரு மற்றவருடையது, உடல் என்னுடையது’ எனக் கூறுகின்றனர். ஆக, அவர்கள் துறையிலேயே நேர்மையைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், அரசியலுக்கு வந்து நேர்மையான ஆட்சியைக் கொண்டுவர முடியும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. திரைப்படத்திலேயே சர்காரை சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள் மக்களுக்காக சிறந்த சர்காரை உருவாக்க முடியும் […]

Read More

பல உயிர்களை பலி வாங்கிய புளூ வேல் படமாகிறது

by on November 5, 2018 0

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள். இதன் விளைவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue […]

Read More

ஹிப் ஹாப் ஆதி படத்துக்கு தலைப்பு நட்பே துணை – முதல்பார்வை வீடியோ இணைப்பு

by on November 4, 2018 0

‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் கலக்கிய ஆதி,‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த வெற்றி பெற்ற படத்தை ‘அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இப்போது ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ‘நட்பே துணை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த டி.பார்த்திபன் தேசிங்கு கதை, திரைக்கதை, வசனம் […]

Read More

சுந்தர் சியின் பேய் பிரியமும், துரையின் பேய் பயமும்

by on November 4, 2018 0

இயக்குநர் வி.இசட். துரை இப்போது சுந்தர்.சிக்காக ‘இருட்டு’ என்ற படத்தை இயக்குகிறார். இதுவும் ஒரு ‘ஹாரர்’ படம்தான். அடச்சே இன்னொரு பேய்ப்படமா என்று அலுத்துக் கொள்ளமல் அதற்கு அவர் கூறும் காரணங்களைக் கேளுங்கள். ‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் […]

Read More