பொங்கல் வெளியீடாக வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது ‘விஸ்வாசம்’. இன்னும் 10 தினங்களில் 50வது நாளை எட்டவிருக்கிறது ‘விஸ்வாசம்’. அதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தொடர்ந்து 100வது நாள் விழாவையும் கொண்டாடத் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதாவது அமேசான் பிரைம் ஆன்லைனில் படம் வெளியான 50வது நாள் வெளியிட்டுக்கொள்ள ஒப்பந்தம் […]
Read More‘கனா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது ‘தயாரிப்பு எண் 2’ படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன. படம் பற்றி இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க […]
Read More‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்துக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதிலிருந்து… “ராம் குமார் சாரின் நடிப்பை நாம் ஒரு சில படங்களை தவிர வேறு எதிலும் பார்த்ததில்லை. இந்த படத்தில் அவர் நடித்தது எங்களுக்கு கிடைத்த வரம். நாஞ்சில் […]
Read Moreகல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட் ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார். ஆம்.. கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாக கலந்துகொண்டது ‘ டு லெட் ’ படம். அந்த ஒரே ஆண்டில் உலகம் […]
Read Moreவரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தன் ரஜினி மக்கள் மன்றத்தின் வாயிலாக ரஜினி அறிவித்துள்ளார். அத்துடன் தன் ஆதரவு எந்தக் கட்சிகளுக்கும் இல்லை என்றும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் மட்டும்தான் தங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…
Read Moreகாஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பலியான மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வரும் அடங்குவர். தூத்துக்குடி சுப்ரமணியன், அரியலூர் சிவச்சந்திரன் ஆகிய அந்த இரு வீரர்களின் தீரத்துக்கு வீர வணக்கம் தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அறிவித்திருக்கிறார். கோடி கோடியாக வாங்கும் முதல்நிலை நட்சத்திரங்கள் மௌனம் காக்கும்போது ஒரு நகைச்சுவை நடிகர் இப்படி தன் சம்பாத்தியத்திலிருந்து வெகுமானம் வழங்குவது பெரிய விஷயம்தான். […]
Read Moreடி.ஆரின் இளையமகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் இசையமைப்பாளராக இருந்து வருவது தெரிந்த விஷயம்தான். இவர் தன் தந்தை டி.ராஜேந்தர் தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதுகுறித்து டி.ராஜேந்தர் “எம் மதமும் சம்மதம்… ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்துள்ளேன்..!” என்று கூறியுள்ளார். குறளரசன் மதம் மாறிய வீடியோதான் இன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கீழே…
Read More