March 24, 2025
  • March 24, 2025
Breaking News
March 15, 2019

மெய்சிலிர்க்க வைத்த ஆர்யாவின் நன்றி மறவாமை

By 0 1061 Views

நடிகை சாயிஷாவை நடிகர் ஆர்யா மணந்து கொண்டதில் மிகச்சிலரைத் தவிர திரையுலகினரை  அழைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தது. இதில் அவரை வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் அடக்கம்.

ஆனால், நன்றி மறவாத ஆர்யா நேற்று தன் புது மனைவி சாயிஷா சகிதம் ஒட்டுமொத்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்காக சென்னையில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு ஒன்றை நடத்தி அனைவருக்கும் விருந்தளித்தார். 

வழக்கமாக இதுபோன்ற வரவேற்பு நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக எல்லோருக்காகவும் நடக்கும். அதுவும் சினிமா கலைஞர்கள் வீட்டு நிகழ்வுகளில் வாழ்த்த வரும் சினிமாக்காரர்களுக்குதான் முதல் மரியாதை இருக்கும். மீடியாக்காரர்களில் பலர் மேடையேறி வாழ்த்த முடியாது. அவ்வளவுதான் பொதுவாக சினிமாக்காரர்கள் மீடியாக்களுக்குத் தரும் மரியாதை.

இன்னும் பல திருமணங்களில் பத்திரிகையாளர்களை அழைக்கவே மாட்டார்கள். ஆனால், நிகழ்வு முடிந்ததும் அவர்களது பி ஆர் ஓ மூலமோ, மேனேஜர் மூலமோ அந்த நிகழ்வின் செய்தி மற்றும் புகைப்படங்களை அனுப்பி பிரசுரிக்கச் சொல்வார்கள். அழைப்பு அனுப்ப மனம் இல்லாதவர்களுக்கு பப்ளிசிட்டி மட்டும் தவறக் கூடாது.

ஆனால், இவர்களிலிருந்து விலகி பத்திரிகையாளர்களுக்காக பிரத்யேகமாக ஒரு வரவேற்பை… அதுவும் ஏழு நட்சத்திர ஓட்டலில் நடத்தி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் ஆர்யா. இதனால் ஒவ்வொரு பத்திரிகையாளரும் தனித்தனியாக அவரை வாழ்த்திவிட்டு வர முடிந்தது.

ஒவ்வொருவரிடமும் “கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும்..!” என்றும் கேட்டுக் கொண்டு நெகிழவைத்தார் ஆர்யா. 

நன்றி மறவாத ஆர்யா – சாயிஷா தம்பதி இல்வாழ்வை நல்வாழ்வாக பல்லாண்டு வாழ ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் சார்பாக உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம்..!