September 20, 2026
  • September 20, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் கதையைக் கொண்டது ‘இம்மார்ட்டல்..!’ – ஜிவி.பிரகாஷ்

by on August 31, 2026 0

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா ! AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் […]

Read More

ஒன்ஸ்மோர் திரைப்பட விமர்சனம்

by on August 30, 2026 0

இறுக்கமான வில்லனாகவே இதுவரை நமக்கு அடையாளம் தெரிந்த அர்ஜுன் தாஸுக்கு காத்து வாக்குல ரெண்டு காதல்களை ஏற்படுத்திக் கொடுக்க எப்படித்தான் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு பொறி தட்டியதோ தெரியவில்லை.  கல்லூரிக் காதல் முடிவுக்கு வந்த கையோடு தற்கொலைக்கெல்லாம் முயன்று சதா சோகமாக தெரிந்து கொண்டிருப்பவரை அதிதி சங்கர் விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். ஆரம்பத்தில் விலகி விலகிப் போனாலும் ஒரு கட்டத்தில் அதிதியின் அதிதீவிர காதல் புரிந்து அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் அர்ஜுன் தாஸ்.  ஒரு வழியாக […]

Read More

ஹய் (Hi) திரைப்பட விமர்சனம்

by on August 29, 2026 0

நயன்தாரா கதாநாயகியாக இருக்கும் தைரியத்தில் ரொம்பவும் மெலிதான லைன் ஒன்றை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணு எடவன். கொங்கு மண்டலத்து வசதியான குடும்பத்து வாரிசு என்றாலும் காதலிப்பதற்கு ஓர் பெண் கிடைக்காமல் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறார் கவின். சொந்த அத்தை மகளை காதலிப்பதற்கு கூட பெரிதாக பிளான் எல்லாம் போட்டு பல்பு வாங்கியவர், “இனி நாங்கள் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்…” என்று பெற்றோர் கே பாக்யராஜும், ராதிகாவும் கண்டிஷனாக கூறிவிட, ‘வந்தால் […]

Read More

குறுகிய காலத்தில் தரமான படமாக ஏன் என்னை ஏதோ செய்தாய் உருவானதற்கு சிறப்பான முன்தயாரிப்பே காரணம்..! – தனஞ்செயன்

by on August 29, 2026 0

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு ! Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து […]

Read More

அமரம் திரைப்பட விமர்சனம்

by on August 28, 2026 0

மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய பதிவுகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. ஆனால் கிழக்கு மலை தொடர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்களைப் பற்றிய பட பதிவுகள் குறைவுதான்.  அந்தக் குறையை நிறைவு செய்ய வந்திருக்கிறது இந்தப் படம். இயல்பாகவும் இயற்கைக்கு மனிதன் செய்த கொடுமையின் விளைவாகவும் அந்த பகுதிகளில் மழை பொய்த்து போய் விவசாயமும் விழுந்து கிடக்க, வேறு வழி தெரியாதவர்கள் வாழ்வாதாரமாக வன்முறையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.  அந்தக் குழுவுக்கு என்று […]

Read More

சினிமா என்பது கன்னடமோ தமிழ் அல்லது தெலுங்கோ அல்ல… அது இந்திய சினிமா..! – நடிகர் யாஷ்

by on August 25, 2026 0

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா! KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் […]

Read More

இருமுடி கட்டு இயக்குநர் சிவாவை ஏன் பிடிக்கும் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன்..! – ரவிதேஜா

by on August 24, 2026 0

’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர், […]

Read More

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற ‘தமிழ்நாடு கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி மாநாடு (TNEPIC)..!’

by on August 24, 2026 0

சென்னை, ஆகஸ்ட் 24, 2026:* இதயத் துடிப்பு கோளாறுகள் குறித்த நவீன மருத்துவத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த ‘தமிழ்நாடு இதய மின் உடலியங்கியல் மாநாடு (TNEPIC 2026)’ சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வேகமாக மாற்றம் கண்டு வரும் இதய இலய கோளாறுகள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விவாதங்கள், அறிவியல் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் நேரடி கற்றல் பயிற்சிகள், இரண்டு நாட்கள் மாநாட்டில் இடம்பெற்றன. இதய இலய சிகிச்சையில் முன்னணி நிபுணர்கள், பல வெளிநாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், […]

Read More

நான் ஹீரோவாக நடிப்பதை பல தயாரிப்பாளர்களும் விரும்பாத நிலையில் பிடிவாதமாக என்னை நடிக்க வைத்தார் ஒன்ஸ்மோர் இயக்குனர்..! – அர்ஜுன்தாஸ் நெகிழ்ச்சி

by on August 23, 2026 0

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் […]

Read More

தமிழ் குறும்படப் போட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி!

by on August 23, 2026 0

RMK Entertainment & Film Development Organisation (FILMDO) நடத்தும் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற படங்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, வரும் ஆகஸ்டு 29 அன்று ‘பிரசாத் லேப் தியேட்டரில்’ நடைபெற இருக்கிறது.  கஸாலி & மாரி பாண்டியர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.  இந்த நிகழ்ச்சிக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியமானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.  பரிசு விபரம்: முதல் பரிசு: ரூ. 25,000/- சிறந்த இயக்குநர்: ரூ. 15,000/- சிறந்த நடிகர்: ரூ. 10,000/- […]

Read More