August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Tag Archives

ரஜினி கோடு போட்டார் கண்ணன் ரோடு போட்டார்

by on March 4, 2019 0

பெருகி வரும் தண்ணீர்த் தேவையின் அவசியம் கருதி நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து அறிஞர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்பே நாட்டின் நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கினால் அதற்கு நான் முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார் ரஜினி. அன்றைய காலகட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஆகப்பெரிய விஷயம். ஆனால், அதன் தேவை இப்போது பல மடங்காக உயர்ந்து விட்டது ஒருபுறமிருக்க, ரஜினி வாயால் சொன்னதை இப்போது தன் படத்துக்காக செய்து […]

Read More

கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் பூமராங்

by on November 23, 2018 0

விவசாயத்தின் அருமை உணரப்பட வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வசிக்கிறோம். அதனை ஊடகங்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆதிலும் வெகுஜன ஊடகமான சினிமாவில் சொன்னால் மட்டுமே எந்த செய்தியும் அதிகமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’ படத்தில் இன்றைய காலநிலைமைக்கேற்ப சொல்லியிருக்கிறார் ஆர்.கண்ணன். இதில் முக்கியமான விஷயம், இந்தப் படத்தை ஆர்.கண்ணனே தன் மசாலா பிக்ஸுக்காகத் தயாரித்திருக்கிறார் என்பது. கமர்ஷியலாக ஒரு படம் எடுத்தோமா, காசு பார்த்தோமா […]

Read More

பூமராங் படத்தை அனைத்து வயதினரும் ரசிக்க யு சான்றிதழ்

by on September 27, 2018 0

‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக படத்தைத் தயாரித்தும் இயக்கியும் இருக்கும் ஆர். கண்ணன். “ஒரு நல்ல கதையை வைத்துக் கொண்டு, ரசிகர்களின் ரசனையோடு ஒன்றிணைந்து அனைத்து வயதினரும் ரசிக்கும் படத்தை கொடுப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக நான் அதுதான் இன்றைய தேவை என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்… சில சமயங்களில் அனைத்து ரசிகர்களுக்கும் சென்று சேர வேண்டிய கதை, ‘யு/ஏ’ சான்றிதழால் […]

Read More

மெர்க்குரி விமர்சனம்

by on April 24, 2018 0

சைகை மொழியில் சத்தமாக ஒரு கருத்தை இந்தப்படத்தின் மூலம் சொல்ல முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கதை என்னவோ இயல்பாக, பழைய பாதையில்தான் ஆரம்பிக்கிறது. நான்கு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பது எண்பதுகளிலிருந்து சப்பிப்போட்ட பனங்கொட்டை லைன். அதிலும் அதில் ஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பது அந்தப் பனங்கொட்டையை வெயிலில் காயவைத்ததைப் போன்றது. இதில் இருக்கும் ஒரே சுவாரஸ்யம், அவர்கள் அனைவரும் காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் என்பதுதான். சனந்த், தீபக், […]

Read More
  • 1
  • 2