January 22, 2025
  • January 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பூமராங் படத்தை அனைத்து வயதினரும் ரசிக்க யு சான்றிதழ்
September 27, 2018

பூமராங் படத்தை அனைத்து வயதினரும் ரசிக்க யு சான்றிதழ்

By 0 1239 Views

‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக படத்தைத் தயாரித்தும் இயக்கியும் இருக்கும் ஆர். கண்ணன்.

“ஒரு நல்ல கதையை வைத்துக் கொண்டு, ரசிகர்களின் ரசனையோடு ஒன்றிணைந்து அனைத்து வயதினரும் ரசிக்கும் படத்தை கொடுப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக நான் அதுதான் இன்றைய தேவை என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்…

சில சமயங்களில் அனைத்து ரசிகர்களுக்கும் சென்று சேர வேண்டிய கதை, ‘யு/ஏ’ சான்றிதழால் அனைவரையும் சென்று சேர முடியாமல் போக சாத்தியம் இருக்கிறது. எனவே இந்த உறுதியான முடிவை பூமராங் படத்தின் திரைக்கதை எழுதும்போதும், படப்பிடிப்பின் போதும் என் மனதில் நினைத்துக்கொண்டேன். அதன் விளைவுதான் இந்த யு சான்றிதழ்..!” என்றார் இயக்குனர் கண்ணன்.

கோலிவுட் ஸ்ட்ரைக்கையும் தாண்டி, மிகவும் குறுகிய காலத்தில் படத்தை முடித்திருக்கிறார் கண்ணன். இமைக்கா நொடிகள் படத்தில் கிடைத்த பிரமாதமான வரவேற்புக்கு பிறகு, அதர்வாவின் நடிப்பில் பூமராங் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. அதர்வாவுடன் மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சதீஷ் போன்ற கலைஞர்களுடன், ரதன் இசையும், பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் இணைந்து படத்தின் நேர்த்தியைக் கூட்டியிருப்பதுடன் இந்த யு சான்றிதழும் குழுவினருக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

படத்தை சீக்கிரம் காட்டுங்க கண்ணன் சார்..!