இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து தனிமையால் வாடும் அந்நாட்டு மக்களிடம், மரங்களிடம் அன்பு செலுத்துமாறு அப்போலோனியா தேசிய பூங்கா ஊழியர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.
அதன் விளைவால் அனைத்து வயதினரும் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர்.
‘கொரோனா பரவலால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கட்டியைணைக்க முடியவில்லை. மரங்களை கட்டியணைப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்ற மக்கள் தெரிவித்தனர்.