April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • மருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க முடியும்
July 14, 2020

மருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க முடியும்

By 0 485 Views
கொரோனா வைரஸ் தொற்றுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளதால் சாதாரண காய்ச்சலும் கூட கொரோனாவின் அறிகுறியாகவே கருதப்படுகிறது.
 
இந்நிலையில் காய்ச்சலுக்குப் பயன்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க வேண்டுமானால் மருத்துவர்களிடம் இருந்து மருந்து சீட்டு வாங்கி இருக்க வேண்டும் என்றும் மருந்து சீட்டு இல்லாதவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படாது எனவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. 
 
பல கடைகளில் மருந்துசிசிட்டு இல்லாமல் பாரசிட்டமால் கொடுக்கப்படுவதில்லை எனவும் தெரிகிறது.
 
இதனால் பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வழங்கக்கூடாது என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தது. அரசு தரப்பு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.
 
இதன்மூலம் மருந்துக் கடைகளில் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க மருந்துச்சீட்டு தேவையில்லை என்பது தெளிவாகிறது.