சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர். ஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து… “சென்னை – சேலம் விரைவு […]
Read Moreஅப்போதெல்லாம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனைச் சொல்லும்போது ‘சட்டத்தைக் கையில் எடுத்து வைத்து விளையாடுபவர்’ என்பார்கள். அப்படித்தான் அவர் படங்களில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு விளையாடுவார். அப்படிப்பட்ட அவரையே ஒரு கையிலும், சட்டத்தை இன்னொரு கையிலுமாக எடுத்து ‘ஜக்ளிங்’ விளையாட்டு விளையாடித் தள்ளியிருக்கிறார் அவரிடமே சினிமா பயின்ற விக்கி. வாழும் உதாரணமாக இருக்கக் கூடிய சமூகப் போராளி ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை ஆவணப் படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பொறுப்புடனும், கவனமாகவும் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்க […]
Read Moreபடத்தின் ஒன்லைன் என்ன என்று கேட்டால் இந்தப்பட டைரக்டர் ஜெய் என்ன பதில் சொல்வாரோ தெரியாது. ஆனால், நாம் புரிந்து கொண்டது, “யார் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படி வாழுங்கள்…” என்பதாகத்தான் இருக்கும். பணம் சம்பாதிக்க வக்கில்லாமல் காதலியால் கைவிடப்படும் ஏ.பி.ஸ்ரீதர், எப்படியாவது சம்பாதிக்க ஆசைப்பட்டு நண்பர்கள் ராஜ் பரத், மதி, பாலாஜியுடன் பெரும்பணம் அடிக்கும் அசைன்மென்ட்டை ஒத்துக்கொண்டு அதையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல் லவட்டிக்கொண்டு காட்டில் ஒரு ஜமீன் தோட்டத்தில் அடைக்கலமாகிறார். பின்னர் என்ன நடந்தது […]
Read Moreதனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், நேற்று காலையில் சோனியா காந்தியை சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுகளாக அமைந்தன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துச் செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்களால் மேற்படி சந்திப்புகள் கருதப்பட, டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து… “ராகுல் காந்தி, சோனியா இருவரையும் மரியாதை நிமித்தமாகவே […]
Read Moreஎங்களுக்கு சம்பள உயர்வு இன்னும் கைக்கு வரவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்..? இதே கவலைதான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் என்றால் நம்புவீர்களா..? ஆனால், அதுதான் உண்மை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய உயர்வை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைக்க விரும்புவதாகவே கூறப்பட்டது. இன்னும் உயர்த்தப்பட்ட […]
Read More