August 3, 2026
  • August 3, 2026

Simple

முருகப்பெருமானுக்கும் காக்டெயிலுக்கும் இதுதான் சம்பந்தம் சர்ச்சை இயக்குனர் முருகன்

by on February 4, 2020 0

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார்.  ஹீரோவாக யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் […]

Read More

இந்தியில் தடம் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

by on February 3, 2020 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது […]

Read More

கொரானோ மொத்த மரணம் 361 ஒரே நாளில் 57 பேர் பலி

by on February 3, 2020 0

எதைத்தான் தின்பது என்ற விவஸ்தை இல்லாத சீனர்களால் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரானோ வைரஸ். வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது.   கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. அதில் சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.   சீனாவிலிருந்து இந்த கொடூர வைரஸ் தாக்குதல் தற்போது உலகின் 20-க்கும் அதிகமான […]

Read More

சைக்கோ இயக்குனர் மிஷ்கின் பேச்சுக்கு எச் ராஜா கண்டிப்பு – சபாஷ் சரியான எதிர்ப்பு

by on February 3, 2020 0

அண்மையில் நடந்த ‘வால்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மிஷ்கினும் கலந்து கொண்டார். அதில் பேசும்போது, ”சைக்கோ’ படத்தில் லாஜிக் பற்றி பலரும் பேசி ரொம்ப மிரண்டு போய் கிடக்கிறேன். ஒரே ஒரு விஷயம், ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போனதால் ராவணனிடம் போய் ராமன் சண்டை போட்டான். பொண்டாட்டியைத் தூக்கி வந்துவிட்டு, நியாயம் இருக்கிறது என்று சண்டை போடுகிறான். அதில் லாஜிக்கே இல்லை. கும்பகர்ணன் வந்து ராவணன் எனக்குச் […]

Read More

கொரானோ பீதிக்கு கோலிவுட்டும் தப்பவில்லை

by on February 3, 2020 0

கொரானோ வைரஸ் தகவல் வந்தாலும் வந்தது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துடுச்சு… கேரளாவுக்குள்ள வந்துடுச்சு… தமிழ்நாட்டுக்குள்ள வந்துடுச்சு… உங்க வீட்டு வாசல்ல நிக்குது… என்றெல்லாம் ஏகப்பட்ட வதந்திகள்.   இது ஒருபக்கம் என்றால், வேண்டாதவர்களை காயப்படுத்தவும், அப்பாவிகளை வம்புக்கு இழுக்கவும் கூட இந்த கொரானோ பயன்பட்டு வருவதுதான். அப்படி, தான் உண்டு… தன் போண்டா உண்டு என்று இருந்த காமெடி நடிகர் போண்டா மணி ‘கொரோனோ வைரஸா’ல் பாதிக்கப் பட்டுள்ளதாக ஒரு YouTube சேனலில் யாரோ தவறான தகவலை […]

Read More

தேவாரம் வாழ்த்து எனக்கு ஆசீர்வாதம் – சிபிராஜ்

by on February 2, 2020 0

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும்  “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின்  திரைவாழ்வில் புகழ்மிக்க படம்  “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார்.  திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட வால்டர் தேவாரம் பேசியது… எனக்கு சினிமா அவ்வளவாக தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மூணாறு. அங்கிருந்தபோது சினிமா […]

Read More