March 28, 2023
  • March 28, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கலாட்டா மீடியா அலுவலகத்தில் திரௌபதி இயக்குனர் வைரல் வீடியோ – யார் செய்த கலாட்டா
March 7, 2020

கலாட்டா மீடியா அலுவலகத்தில் திரௌபதி இயக்குனர் வைரல் வீடியோ – யார் செய்த கலாட்டா

By 0 644 Views

அண்மையில் Galatta Media யூ டியூப் குரூப் திரெளபதி திரைப்படம் சம்பந்தமாக எடுத்த இயக்குநர் மோகன்.ஜி நேர்காணலில் அவர் walked out செய்ததாக thumbnail வைச்சு டெலிகாஸ்ட் செய்தார்கள்.

அதற்கு மோகன் “இது யாரையோ திருப்தி படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். நேர்காணல் செய்த விக்ரமன் என்பவரின் கேவலமான செயல் இது. அவர் எனக்கு நன்றி சொல்ல நானும் பதிலுக்கு நன்றி கூறி முடிந்த நேர்காணலை இப்படி சித்தரித்து ‘மீடியா மாஃபியா’ என்றால் என்ன என்று தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்கள். அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை இதை விடுவதாக இல்லை..!” என்று சொல்லி இருந்தார்.

கூடவே “மறுநாள் Galatta Media அலுவலகம் சென்று அந்த சேனல் நிர்வாக அலுவலரிடம் விசாரித்த போது என் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ இது.. தி டீரென்று நன்றி வணக்கம் என்று சொன்ன அந்த காட்சி மட்டும் பதிவாக வில்லையாம். காணவில்லையாம்..!

ஆனால் மைக் கழட்டி எழுந்து சென்ற வரைக்கும் பதிவு செய்யப்பட்டு என் அனுமதி இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.. இவர்கள் யாரையோ திருப்திபடுத்த இப்படி வன்மமாக நடந்து கொண்டுள்ளனர்.. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்.. சினிமா துறை இவர்களை புறக்கணிக்க வேண்டும்… ” என்று அந்த வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.

யார் செய்கிற கலாட்டா இது..? கீழே வீடியோ…