நேற்று சமூக ஊடகங்களில் அஜித் கையொப்பமிட்டு அனுப்பிய அறிக்கை ஒன்று வைரலானது. அதில் இதுவரை சமூக ஊடகங்கள் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாத அவர் விரைவில் சமூக ஊடகத்தில் அக்கவுண்ட் தொடங்கவிருப்பதாகவும் கூறியிருந்ததாக இருந்தது.
அதில் அவரது கையெழுத்தும் இருந்ததால் ரசிகர்களும், மீடியாக்களும் குழம்பினார்கல். அவர் தரப்பில் விசாரித்தபோதுதான் அது போலியானது என்று அறிய முடிந்தது.
அதன் விளைவாக இன்று தன் வழக்கறிஞர்கள் மூலம் சட்டப்படியான நோட்டீஸ் ஒன்ரை அஜித் மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் தனக்கு எப்போதும் சமூக வலைதள அக்கவுண்ட் இல்லைஎன்பதை மீண்டும் உறுதிப்படுத்தி, தன் கையெழுத்தை இப்படித் தவறாக பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் நகல் கீழே…
Ajith Legal Notice