நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை […]
Read Moreஇந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர் சரத்குமார். இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது… பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு […]
Read Moreஅவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா […]
Read Moreஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடி திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனை தேடும் கதைதான் “ரவாளி”. கதாநாயகன் கதைப்படி, தமிழ் நாட்டில் வாழும் இந்திக்கார பையன் என்பதால், இயக்குனர் ரவி ராகுல், கதாநாயகன் ஆர்.சித்தார்த்க்கு நடிப்போடு, தமிழும் கற்றுக் […]
Read Moreமகன் தந்தைக்காற்றும் உதவியை பறைசாற்றும் படம். காவல்துறையிலிருந்த தந்தை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை அதே காவல்துறைக்குள் வந்து மகன் தீர்த்து வைக்கும் கதை. காவல்துறை என்றால் இதுவரை போலீஸ் கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர், இன்ஸ்பெக்டர், ஏட்டு என்று தான் நாம் சினிமா வாயிலாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அதே காவல்துறைக்குள் தவறு செய்யும் காவலர்களைக் கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது என்ற உண்மையை இந்தப் படத்தின் மூலம் நம் முன்வைக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். அப்படி […]
Read Moreநலிந்து வரும் நாடகத்துறையில் கோமாளியாக இருக்கிறார் நாயகன் வைபவ். நாடகங்கள் குறைந்து வருவதால் இதிலிருந்து முன்னேற முடியாது என்று வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு அதற்கு பணம் சேர்ப்பதற்காக ஒரு இடத்தில் டிரைவர் பணியில் சேர்கிறார். உப்பை ஏற்றி வரும் அவரது வண்டிக்குள் போதை மருந்து இருக்க போலீசில் வகையாக சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து தப்பித்து குற்றத்துக்கு மேல் குற்றமாக செய்து கொண்டிருப்பவர் கடைசியில் என்ன ஆனார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு ஆக்ஷன் கதைக்கு நாயகனாக […]
Read More