நலிந்து வரும் நாடகத்துறையில் கோமாளியாக இருக்கிறார் நாயகன் வைபவ். நாடகங்கள் குறைந்து வருவதால் இதிலிருந்து முன்னேற முடியாது என்று வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு அதற்கு பணம் சேர்ப்பதற்காக ஒரு இடத்தில் டிரைவர் பணியில் சேர்கிறார். உப்பை ஏற்றி வரும் அவரது வண்டிக்குள் போதை மருந்து இருக்க போலீசில் வகையாக சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து தப்பித்து குற்றத்துக்கு மேல் குற்றமாக செய்து கொண்டிருப்பவர் கடைசியில் என்ன ஆனார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு ஆக்ஷன் கதைக்கு நாயகனாக […]
Read More“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே ..” என்ற ஒரு முதுமொழி இருக்கிறது. ஆக ரெண்டகம் என்றால் துரோகம் என்று அர்த்தம். யார், யாருக்கு எப்படி துரோகம் செய்தார்கள் என்பது தான் இந்தப் படத்தின் கதை. காதலி ஈஷா ரெப்பாவுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையைத் தொடங்கும் ஆசையில் இருக்கும் குஞ்சாக்கோ போபன் அதற்கான பணம் ஈட்ட ஒரு அசைன்மெண்ட்டை மேற்கொள்கிறார். அதன்படி ‘அசைனர் ‘ என்கிற மும்பை தாதா, கடத்தல் தங்கத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில் நடந்த தாக்குதலில் […]
Read Moreஒரே ஷாட்டில் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படத்தை சொல்வது என்பது அசுர சாதனை. அதில் ஒரு பிளாஷ்பேக்கும் அமைந்திருக்கிறது. பார்த்திபன் ஏற்கனவே நான் லீனியரில் இப்படி ஒரே ஷாட்டில் படம் எடுத்திருந்தாலும் கிட்டத்தட்ட அதே சீசனில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது என்பதால் இதுவும் ஒரு அரிய முயற்சி என்று சொல்ல முடியும். இந்த சாதனையை சிறு குறைகள் இருந்தாலும் வெற்றிகரமாகக் கடந்து முடித்திருக்கிறார் இயக்குநர் அஜு கிழுமலா. ஒரு சிற்றூரில் காவல்நிலையத்தில் ஒருநாள் இரவு சில […]
Read Moreபன்னாட்டு தயாரிப்பான கார் ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து அதன் சுவடுகளே இல்லாமல் கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்து குழந்தை பெற்ற தன் மனைவி ரித்திகாவை மருத்துவமனையில் இருந்து காணவில்லை என்று புகார் செய்கிறார். அவர் கிடைத்தாரா என்பதுதான் மீதி கதை. கருணாசுக்கு இந்தப்படம் பல விருதுகளைப் பெற்றுத் தரும். என்ன ஒரு அற்புதமான நடிப்பு..? அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கும் அவரைக் கைக்குழந்தையைப் பிடுங்கி விட்டு இன்ஸ்பெக்டர் பாகுபலி […]
Read Moreஇப்படி ஒரு படம் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆச்சு என்று நினைக்க வைக்கும் படம். மண் மணத்துடன் மனிதர்களையும், கிராமிய வாழ்க்கையையும் அங்கே வலிந்து திணிக்கப்பட்ட சாதிய கொடுமைகளை இன்னும் தூக்கிப் பிடிக்கும் அவலத்தையும் உணர்வும், உணர்ச்சியுமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சேரா. கலையரசன். தென் மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. டைட்டில் போடும்போது அந்த கிராமம் என்ன விதமான சாதிய கட்டுப்பாடுகளுடன் இருக்கிறது என்பதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் […]
Read Moreமெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தில் இடம்பெற்ற ”தார் மார் தக்கரு மார்…’ என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் ‘தார் மார் தக்கரு மார்..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் […]
Read More