August 1, 2026
  • August 1, 2026

Simple

எனக்கு என்டே கிடையாது திரைப்பட விமர்சனம்

by on October 9, 2023 0

தன்னம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் முதல் படம் இயக்கும்போது அந்தப் படத்தில் தானே ஹீரோவாக நடிப்பார்கள். இதற்கு பார்த்திபனில் இருந்து பிரதீப் வரை உதாரணங்கள் சொல்லலாம்.  அந்த வரிசையில் சேர்கிறார் இந்தப் பட இயக்குனர் விக்ரம் ரமேஷ். இந்தப் படத்தின் முதன்மை நாயகனாக, கால் டாக்ஸி டிரைவராக வரும் அவருக்கு பெப்ஸி நழுவி விஸ்கியில் விழுந்தது போல் அடுத்தடுத்து அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன – ஒரு பப்பில் இருந்து நாயகி ஸ்வயம் சித்தாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் […]

Read More

800 படத்தின் திரை விமர்சனம்

by on October 8, 2023 0

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் யாரும் எட்ட முடியாத உயரமான 800 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையைச் செய்தவர் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முத்தையா முரளிதரன். தமிழரான அவரது வாழ்க்கை சாதனைகள் நிரம்பியது என்றாலும் எத்தனை சோதனைகளைத் தாண்டி அதைச் சாதித்தார் என்பதை அந்தப் போராட்ட வலிகளோடு இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி. முத்தையா முரளிதரனின் சிறு வயது முதலே அவரது வாழ்க்கை படத்தில் சொல்லப்படுகிறது. கிரிக்கெட் மீதான ஆசையால் அவர் உறைவிட பள்ளிக்குச் […]

Read More

இந்த கிரைம் தப்பில்ல திரைப்பட விமர்சனம்

by on October 7, 2023 0

பெண் இனத்துக்கு கொடுஞ்செயல் புரியும் காமுகர்களை சட்டத்தை மீறி தண்டித்தாலும் அந்த கிரைம் தப்பில்லை என்பதுதான் படத்தின் ஒன் லைன். இதைத் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் தேவகுமார். ஒரு பக்கம் கிராமத்துப் பெண் நாயகி மேக்னா இலன், நகரத்துக்கு வந்து மார்டனாகி செல்போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கு வரும் மூன்று வாலிபர்களோடு தனித்தனியாக அறிமுகமாகி அவர்களைக் காதலிப்பது போல் நடிக்கிறார். அது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இன்னொரு பக்கம், […]

Read More

ரத்தம் திரைப்பட விமர்சனம்

by on October 6, 2023 0

ஆணவக் கொலை கேள்விப் பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் நிறைய வெறுப்புக் கொலைகளைக் காட்டுகிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். அது என்ன வெறுப்புக் கொலை..? தனக்கு பிடித்த நடிகரைப் பற்றித் தவறாக எழுதிய பத்திரிகையாளர், தனது மதத்துக்கு எதிராக செயல்பட்டதாக ஒருவன் நம்பிய கலெக்டர் – இப்படித் தனி நபர்களின் வெறுப்புக்கு ஆளானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இது வழக்கமாக நாட்டில் நடப்பதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால்,  இப்படித் தனி மனித வெறுப்பின் பின்னணியில் வேறு ஒருவரின் சுயநலம் இருப்பதாக […]

Read More

ஷாட் பூட் த்ரீ திரைப்பட விமர்சனம்

by on October 6, 2023 0

தலைப்பைப் பார்த்த உடனேயே தெரிந்திருக்கும் ‘இது குழந்தைகளுக்கான படம்’ என்று. தலைப்பில் இருப்பது போலவே  ஒரு வகுப்பில் பயிலும் இரு பள்ளிச் சிறுவர்கள் மற்றும் சிறுமி என்ற மூவர்தான் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்கிறார்கள். கைலாஷ், பிரணதி, வேதாந்த்தான் அந்த மூவர். இந்த மூவரில் ஒருவன் குறைவான மதிப்பெண் எடுத்து விட்டான் என்பதற்காக மீதி இருவரும் தங்கள் மதிப்பெண்ணைக் கொடுத்து அவனைக் காப்பாற்ற நினைக்கும் அளவுக்கு ‘மார்க்’க பந்துக்கள். இவர்களில் கைலாஷின் பெற்றோரான வெங்கட் பிரபுவும், […]

Read More

லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 170 தொடங்கியது..!

by on October 4, 2023 0

பிரமிப்பூட்டும் நட்சத்திரங்களுடன் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கியது… அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் விதமான பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரிப்பதற்காகவே பெயர்பெற்ற நிறுவனமான லைகா புரோடக்ஷன்ஸ், தொடர்ந்து உற்சாகமான அறிவிப்புகளை கொடுத்து வரும் நிலையில், இந்த மாதத்தில் ‘தலைவர் 170’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக நோக்கிலான கருத்து கொண்ட படங்களுக்காக அறியப்படும் இயக்குநர் TJ ஞானவேல் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்குகிறார். 2.O, தர்பார் மற்றும் லால் சலாம் […]

Read More