நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’. இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் மற்ற நிறுவனங்களைப் போல அல்லாமல், முதல் தலைமுறை தொழிலதிபர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து துவங்கியிருக்கும் கார் சேவை நிறுவனம் தான் இந்த ‘ரைடு’ (Ryde).
ஓட்டுனர்களுக்கு சிறந்த சலுகைகளை அளிப்பதன் மூலம் பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை கொடுப்பதுதான் இந்த Ryde நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும். இந்த வாகன சேவைக்கான ‘Ryde App’ அறிமுக விழாவில் நடிகை சினேகா கலந்துகொண்டு ‘Ryde App’ஐ அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய சினேகா, “இன்று கால் டாக்ஸி சேவைகள் புதிது புதிதாக வருகின்றன தான். ஆனால் பல ஓட்டுனர்களால் பயணிகள் பலரும் பலவிதமாக அவதிக்குள்ளாகி சங்கடப்பட்ட நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. எனது கணவர் பிரசன்னா கூட, இதுபோன்ற கால் டாக்ஸி சேவை தாமதத்தாலும் ஓட்டுனரின் அலட்சியத்தாலும் பாதிக்கப்பட்ட நிகழ்வும் கூட உண்டு.
இன்று பல கால் டாக்சி நிறுவனங்கள் தங்கள் சேவையை பயன்படுத்தும் பெண்களுக்கு அவர்களின் பயண பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் அக்கறை காட்டுவதில்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. இந்த பிரச்னைகளை எல்லாம் களையும் விதமாக தற்போது உருவாகியிருக்கும் Ryde நிறுவனம் தனது பணியை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன்” என்று கூறி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்
RYDE Sneha
Ryde நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர் பிரீத்தி பேசும்போது, “சென்னை போன்ற மாநகரங்களின் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு நாங்கள் இந்த ‘Ryde’ஐ துவங்கியுள்ளோம். இதுவரை பல கால் டாக்ஸி நிறுவனங்களும் தற்போது அச்சத்துடன் பார்க்கும் விஷயம்தான் பயண பதிவு ரத்து (booking cancellation).
இன்னும் விளக்கமாக சொன்னால் இதற்கு முன்பு சில கால் டாக்ஸி நிறுவனங்களில் வாகனங்களை பயன்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்த பணிகளில் பெரும்பாலோனோர், அவர்களின் சேவை தரம் சரியில்லாத காரணத்தினால் பயணம் துவங்குவதற்கு முன்பாகவோ, அல்லது பாதி வழியிலோ தங்களது பதிவை ரத்து செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பெரும்பாலும் வாகன ஓட்டுனருக்கும், பயணிக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் தான் ஏற்படுகிறது.
இந்த குறைகளைக் களைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக பயணிகளுக்கு நிம்மதியான வசதியான பயணத்தை ஏற்படுத்தி தரும் விதமாக உருவாகி இருக்கும் நிறுவனம்தான் Ryde’. மற்ற நிறுவனங்களின் கால் டாக்ஸி சேவைகளால் பயணிகளுக்கு என்னென்ன அசௌகரியங்கள் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை துல்லியமாக அலசி, அவற்றிற்கு தீர்வு தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனம்தான் இந்த ‘Ryde’.
இதன் தாரக மந்திரமே “ஓட்டுனர்களை நாங்கள் மிகச் சிறப்பாக நடத்துகிறோம்.. ஓட்டுநர்கள் பயணிகளை மிகச்சிறப்பாக நடத்துவார்கள்” என்பதுதான். அந்தவிதத்தில் ஓட்டுனர்களின் மனநிலையை கணித்து அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக தங்களுக்கு கிடைக்கும் கமிஷனில் 90 சதவீதத்தை ஓட்டுனர்களுக்கு கொடுத்துவிட்டு 10 சதவீதத்தை மட்டுமே ‘Ryde’ பெற்றுக்கொள்கிறது (மற்ற நிறுவனங்களில் இது 75-25 என்கிற விகிதத்தில் தான் இருக்கிறது)
இதனால் ஓட்டுனர்கள் மனமகிழ்ச்சியுடன் தங்கள் வேலையில் ஈடுபடுவார்கள்.. அவர்களது தேவை சரியானபடி பூர்த்தியாவதால், வாடிக்கையாளர்களை மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்துவதுடன், அவர்களது பயணம் சிறப்பாக அமையவும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை ‘Ryde’ உறுதியாக நம்புகிறது” என கூறினார்.