March 13, 2026
  • March 13, 2026
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • 15 செ.மீ. பெருங்குடல் கட்டியை வெற்றிகரமாக அகற்றி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை!
February 24, 2026

15 செ.மீ. பெருங்குடல் கட்டியை வெற்றிகரமாக அகற்றி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை!

By 0 56 Views

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜூம் ஸ்கோப் தொழில்நுட்ப உதவியுடன் குறைந்தளவு ஊடுருவும் எண்டோஸ்கோபிக் சிகிச்சை…

சென்னை, 24 பிப்ரவரி 2026: சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் நவீன மருத்துவ சிகிச்சைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமான சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. அதன்படி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 80 வயது பெண்ணுக்கு சிக்மாய்டு பெருங்குடலில் பக்கவாட்டில் பரவியிருந்த 15 செ.மீ அளவு கொண்ட அடினோமா பாலிப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபிக் சப்மியூகோசல் டிசெக்ஷன் Endoscopic Submucosal Dissection என்ற குறைந்த பட்ச ஊடுருவும் எண்டோஸ்கோபிக் செயல்முறை மூலம் சிகிச்சை அளித்தது. ஜூம் ஸ்கோப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்த குறைந்த அளவு ஊடுருவும் சிகிச்சை தமிழ்நாட்டில் முதன்முறையாக அப்பல்லோவில் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சிகிச்சைக்காக நோயாளி வரும்போது அவரின் மலக்குடலில் இருந்து இரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற உபாதை இருந்தது. பரிசோதனையில் அவரின் சிக்மாய்டு பெருங்குடலில் அதாவது மலக்குடலுக்கு சற்று மேல் பெருங்குடலின் இறுதி பகுதியே சிக்மாய்டு பெருங்குடல் ஆகும். இந்த இடத்தின் பக்கவாட்டில் பரவக்கூடிய வகையில் பெரிய அடினோமா பாலிப் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாலிப் வகையானது புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். கட்டியின் அளவு மற்றும் அவை இருக்கும் இடம் கவனத்தில் கொண்டு, இவருக்கு மேம்பட்ட எண்டோஸ்கோபிக் நிபுணத்துவம் மற்றும் துல்லியமான சிகிச்சை தேவையாக இருந்தது.

இந்நிலையில் மருத்துவக்குழு நோயாளிக்கு எண்டோஸ்கோபிக் சப்மியூகோசல் டிசெக்ஷன் (Endoscopic Submucosal Dissection – ESD) என்ற நவீன மருத்துவ சிகிச்சை முறையைத் தேர்வு செய்தது. இது இரைப்பை – குடல் பாதையில் இருக்கும் ஆரம்ப கட்ட கட்டிகளை எண்டோஸ்கோப் கருவி மூலம் அகற்றும் நவீன சிகிச்சை முறையாகும். இதன் மூலம் நோயாளிக்கு 15 செ.மீ. அளவிலான கட்டி இருந்த நிலையில் அதை என்-ப்ளாக் முறையில் முழு கட்டியும் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

ஜூம் ஸ்கோப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சை, அதிகப்படியான பெரிதாக்கத்தையும் மற்றும் திசு அடுக்குகளின் தெளிவான காட்சியை வழங்கியது. இதன் மூலம் மருத்துவ நிபுணர்கள் கட்டியின் எல்லைகளைத் துல்லியமாக கண்டறிந்து, சப்மியூகோசல் அடுக்குகளை மிக நுணுக்கமாக பிரித்து அகற்ற முடிந்தது. இதனால் உறுப்பு சேதமின்றி, கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. இந்த செயல்முறை சுமார் ஆறு மணி நேரம் நீடித்தது.

இந்த மேம்பட்ட எண்டோஸ்கோபிக் முறையைத் தேர்வு செய்ததன் மூலம், பொதுவாக குடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய பெரிய அளவிலான கொலோரெக்டல் அறுவை சிகிச்சையை மருத்துவக்குழு திறம்பட தவிர்த்தது.

நோயாளி நீண்ட காலம் படுக்கையில் இல்லாமல் விரைவில் மீட்பு நிலைக்கு திரும்பவும் இந்த நவீன சிகிச்சை உதவியது. மேலும் ஹிஸ்டோபாதாலஜி பரிசோதனை முடிவுகள், இந்த 15 செமீ அளவிலான கட்டி புற்றுநோயல்லாதது என்பதை உறுதிப்படுத்தின. இதனால் அந்தக் கட்டி எதிர்காலத்தில் கொலோரெக்டல் புற்றுநோயாக மாறும் அபாயம் திறம்படத் தடுக்கப்பட்டது.

இந்த குறைந்தளவு ஊடுருவும் சிகிச்சை முறையால் நோயாளிக்கு பல முக்கிய நன்மைகள் கிடைத்தது. குறிப்பாக வயிற்றில் திறந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. சிகிச்சைக்கு பிறகு குறைந்த வலி, விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புதல், குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்குதல், மற்றும் பாரம்பரியமாக திறந்த அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது குறைந்த சிக்கல் அபாயம் போன்ற நன்மைகள் அடங்கும்.

இந்த வெற்றிகரமான சிகிச்சை பெரிய மற்றும் சிக்கலான செரிமானக் குழாய் கட்டிகளை நிர்வகிப்பதில் மேம்பட்ட சிகிச்சை எண்டோஸ்கோபியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, பெரிய அறுவை சிகிச்சைக்கு பொருத்தமற்ற வயதான நோயாளிகளுக்கு இந்த மேம்பட்ட சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

டாக்டர் ஆர்.ரவி, இரைப்பை-குடல்-கல்லீரல் நோய்கள் மற்றும் மேம்பட்ட எண்டோஸ்கோபி துறை தலைவர், அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தேனாம்பேட்டை. அவர் தெரிவித்ததாவது…

‘‘மேம்பட்ட எண்டோஸ்கோபிக் சப்மியூகோசல் டிசெக்ஷன் செயல்முறையானது உறுப்பை பாதுகாக்கிறது. அதே நேரம் பெரிய மற்றும் சிக்கலான இரைப்பை குடல் கட்டிகளுக்கு மிகத் துல்லியமாக சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. இந்த சிகிச்சையின் போது ஜூம் ஸ்கோப் தொழில்நுட்பத்தின் பயன்பாடு திசு அடுக்குகளை தெளிவாக காட்சிப்படுத்தி ஒரே நேரத்தில் கட்டியைப் பாதுகாப்பாக அகற்றும் திறனை அதிகரிக்கிறது. இந்த மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சையின் வழியாக பெரிய அறுவை சிகிச்சையை தவிர்க்கவும் நோயாளியின் மீட்பு காலத்தை விரைவாக்கவும் முடியும் என்பதை இந்த வெற்றிகரமான சிகிச்சை நமக்கு நிரூபித்துள்ளது.’’

கரண் பூரி, தலைமை செயல் அதிகாரி, அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தேனாம்பேட்டை மற்றும் அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர், தரமணி, சென்னை. அவர் தெரிவித்ததாவது…

“சிக்கலான நிலைமைகளுக்கு குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை வாய்ப்புகளை வழங்கும் வகையில், மேம்பட்ட தொழில்நுட்பங்களிலும் சிறப்பு நிபுணத்துவத்திலும் அப்பல்லோ மருத்துவமனைகள் தொடர்ந்து முதலீடும் உரிய கவனமும் செலுத்தி வருகின்றன.இந்த வெற்றிகரமான செயல்முறை, இரைப்பை–குடல் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய முறைகளை முன்னெடுத்து, நோயாளிகள் பாதுகாப்பான சிகிச்சை, விரைவாக குணமடைதல் மற்றும் சிறந்த நீண்டகால விளைவுகளை பெறுவதை உறுதிப்படுத்துகிறது.’’

இந்த சிக்கலான பிரச்னைக்கு திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக மேம்பட்ட எண்டோஸ்கோபிக் சிகிச்சையானது இரைப்பை–குடல் கட்டிகளின் சிகிச்சையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜூம் ஸ்கோப் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் எண்டோஸ்கோபிக் சப்மியூகோசல் டிசெக்ஷன் முறையை பயன்படுத்தியதன் மூலம், மருத்துவக் குழு நோயாளியின் பெருங்குடலை பாதுகாத்தபடி கட்டியை முழுமையாக அகற்றியுள்ளது. இதனால் பெரிய அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடிந்தது. அப்பல்லோ மருத்துவமனை நிபுணர்கள், நோயாளிக்கு பாதுகாப்பான சிகிச்சை மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை வழங்குவதில் தனது முன்னணி நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

For more Information please contact:
APOLLO HOSPITALS I Suganthy 9841714433
ADFACTORS PR| Timothy J 9962629240 | Sarath Kumar 9551785252 | Shiva J 8428537322