பி.வாசு இயக்கத்தில ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘சந்திரமுகி’.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருந்தது.
இடையே, ‘தர்பார்’ படத்துக்காக அளித்த பேட்டியில் ரஜினியிடம் ‘சந்திரமுகி 2’ கதைக்கான ஒன்லைன் குறித்துப் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார்.
அப்போது அதற்கு பதிலளித்த பி.வாசு, ‘சந்திரமுகி 2’ -படக் கதை ரெடி.. அதை நானேதான் இயக்கவேன்…” என்று சொல்லி இருந்தார்.
இதனிடையே, அந்த ‘சந்திரமுகி 2’ படம் குறித்து இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் லாரன்ஸ். பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ரஜினிக்கு மாற்றாக லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இது தொடர்பாக லாரன்ஸ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ‘”நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்கள் அனைவரு க்கும் ஒரு சந்தோஷமான செய்தியைப் பகிர்கிறேன். எனது அடுத்த படங்களில் ஒன்று என் தலைவரின் படமான ‘சந்திரமுகி 2’.
தலைவரின் அனுமதி மற்றும் ஆசியுடன் இந்தப் படத்தில் நடிப்பது என் அதிர்ஷ்டம். பி.வாசு சார் இயக்க, எனது அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் தயாரிக்கவுள்ளார்”. என்று சொல்லி இருக்கிரார்.
அத்துடன் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார். ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார். ரஜினி நடிக்கும் சந்திரமுகி-2 திரைப்படத்தில் நடிக்க அட்வான்ஸ் தொகையில் இந்த நிதியுதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.