December 1, 2021
  • December 1, 2021
Breaking News
  • Home
  • Raghava lawrence

Tag Archives

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..?

by on May 24, 2020 0

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் சந்திரமுகி. தமிழில் நீண்ட நாட்கள் ஓடிய சாதனை படம். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்தகவலை சமீபத்தில் ராகவா […]

Read More

விஜய் முன்னிலையில் அனிருத் இசையில் இசைக்க வேண்டும் – இரண்டு கைகள் இல்லாத இசைக் கலைஞரின் விருப்பம்

by on May 9, 2020 0

நடன இயக்குனரும் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்சின் மனிதநேய செயல்கள் நாம் அனைவரும் அறிந்ததே. அவர் செய்து வரும் சேவைகளில் ஒன்று உடல் அளவில் சிறப்பு திறன் கொண்டு இருப்பவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் முயற்சி. அப்படி அவரது குழுவில் இருக்கும் தான்சேன் என்ற இரு கையும் இல்லாத ஒரு வாலிபர் மிகுந்த இசைத் திறமை கொண்டிருக்கிறார். இரண்டு கைகளும் இல்லாவிட்டாலும் அவரால் கீபோர்டு வாசிக்க முடிகிறது. டிரம்ஸ் இசைக்க முடிகிறது. […]

Read More

கொரோனா பாதிப்புள்ள பெண்ணுக்கு பிரசவம் – அரசுக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ்

by on May 2, 2020 0

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்! நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் பிரசவம் செய்யும் நிலையில் இருந்தார், எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டார்கள், இத்தகவலை நான் மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ.வான திரு ரவி சார் அவர்களுக்கு […]

Read More

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 25 ஆயிரம் அளித்த ராகவா லாரன்ஸ்

by on April 26, 2020 0

 பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் தங்களால் முடிந்த அளவுக்கு மட்டும் கொரோநா ஒழிப்புக்கு நிவாரணத்துக்கு நீதி அளித்துக் கொண்டிருக்க ராகவா லாரன்ஸ் மட்டும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். திரையுலக சங்கத்தினர் யார் போய் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் நிதி உதவி அளிப்பவர் வெளியிலும் பல உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் எப்போதுமே செய்து வரும் சேவைகள் உயர்ந்தவை அந்தவகையில் இப்போது மாற்றுத்தறனாளிகளுக்கான நிதியுதவியையும் அளித்திருக்கிறார். தேசிய ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள […]

Read More

ராகவா லாரன்சின் பெரிய உள்ளம் குறித்து டி ராஜேந்தர் நெகிழ்ச்சி கடிதம்

by on April 16, 2020 0

வணக்கம்… நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித் தொகையை வழங்க ஒரு நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம். அந்த திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க […]

Read More

ரஜினிக்கு மாற்றாக சந்திரமுகி 2 வில் ராகவா லாரன்ஸ்

by on April 9, 2020 0

பி.வாசு இயக்கத்தில ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருந்தது. இடையே, ‘தர்பார்’ படத்துக்காக அளித்த பேட்டியில் ரஜினியிடம் ‘சந்திரமுகி 2’ கதைக்கான ஒன்லைன் குறித்துப் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார். அப்போது அதற்கு பதிலளித்த […]

Read More

திருநங்கைகளுக்கு வீடுகள் கட்ட அக்ஷய்குமார் ஒன்றரை கோடி உதவி

by on March 1, 2020 0

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2. ஓ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு மிகவும் பரிச்சயமானவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்தியில் பல வருடங்களாக முன்னணி ஹீரோவாக நடித்து வரும் இவர் இப்போது நம்மூர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் ‘ லக்ஷ்மி பாம் ‘ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி சக்கை போடு போட்ட படம் காஞ்சனா. மூன்று பகுதிகளாக […]

Read More

காஞ்சனா இந்தி – மீண்டும் இணைகிறார் ராகவா லாரன்ஸ்

by on June 1, 2019 0

தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது. பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என […]

Read More

ராகவா லாரன்ஸ் முன்னெடுத்துள்ள தாய் அமைப்பு

by on May 14, 2019 0

தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு, கடந்த அன்னையர் தினத்தன்று ‘தாய் அமைப்பு’ என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களைக் காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். அதைப்போலவே தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தையும் வகுத்திருக்கிறாராம்.  இதைப்பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது, “என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள் […]

Read More

10 நாள் காஞ்சனா 3 வசூல் 130 கோடி+வேதிகா டான்ஸ் வீடியோ

by on April 29, 2019 0

ராகவா லாரன்ஸ் நடிப்பு இயக்கத்தில் உருவான காஞ்சனா 3, ஏப்ரல் 19 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.   சரியாக கோடை விடுமுறையைக் குறிவைத்து வந்ததால் இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. முதலில் முடிவடைந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறதாம்.   இன்னும் இதற்குப் போட்டியாக ஒரு படமும் வெளியாகாத நிலையில் இன்னும் பல கோடிகளை இந்த விடுமுறைக்குள்ளேயே […]

Read More
  • 1
  • 2