March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வாரிக் கொடுப்பதில் வாழும் வடக்கு சினிமா – தேயும் தெற்கு
April 10, 2020

வாரிக் கொடுப்பதில் வாழும் வடக்கு சினிமா – தேயும் தெற்கு

By 0 571 Views

படத்தில் மட்டும்தான் எதையும் சாதிக்க வல்லவர்கள் நம் ஹீரோக்கள் என்பதை பேரிடர் காலங்களில் நாம் நன்றாகவே உணர்ந்து வந்திருக்கிறோம். ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் தான் உண்டு, தன் சொத்து உண்டு என்று அமைதியாகவே இருந்து வருகிறார்கள். 

இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளிலும் தன் பென்ஷன் பணத்தையெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் தன்மையுள்ள மனித தெய்வங்கள் வாழும் நாட்டில் கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு “உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களே…” என்று வார்த்தை அளவில் சொல்லிக்கொள்ளும் பெரிய ஹீரோக்கள் எதையும் கிள்ளிக் கொடுத்தபாடில்லை.

அஜித், சிவகார்த்திகேயன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இரண்டு ஹீரோக்களைத் தவிர முதல்வர் மற்றும் பிரதமர் நிதிக்கு உதவியதாக இதுவரை தகவல் இல்லை. மற்ற சில கலைஞர்கள் கூட சினிமா தொழிலாளர்கள் மற்றும் நடிகர் சங்க கலைஞர்களுக்கு ஓரளவுக்கு உதவியதுடன் சரி…இதில் அதிகம் கவனிக்கப்படாத விமல் தன் கிராமத்தில் மருந்து தெளிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆனால், இதிலும் வடக்கு பாலிவுட்டைச்சேர்ந்த ஹீரோக்கள்தான் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். நிதி கேட்டு அறிவிப்பு வந்தவுடன் தன் சொந்தப் பணத்திலிருந்து 25 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார். (சென்னையில் வெள்ளம் வந்த போது நம் கோலிவுட் சூப்பர் ஹீரோக்கள் கைகட்டிக்கொண்டிருக்க இவர்தான் 2 கோடி ரூபாய் அளிக்கொடுத்தார் என்பதையும் அறிக…)

சல்மான் கான் 23000 பாலிவுட் தொழிலாளர்களுக்கு அவர்களின் கணக்கில் 3000 ரூபாய் அளித்திருக்கிறார். இதன் மொத்தத் தொகை 9 கோடிக்கு மேல் வருகிறது. ரித்திக் ரோஷன் ஒரு லட்சம் பேருக்கு உணவளிக்கிறார்.

பாலிவுட் ஹூரோயின்களும் ஹீரோக்களுக்கு சளைக்காமல் காஜல் அகர்வால், ராக்குல் ப்ரீத் சிங் போன்றோர் உணவிடும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  

பக்கத்து ஆந்திராவிலும் பல ஹீரோக்கள் கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். நம்ம ரஜினியின் நண்பர் மோகன்பாபு இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்து உதவி வருகிறார். ஒருநாள் காய்கறி மட்டும் எட்டு டன் அளிக்கிறாராம்.

‘உதவி செய்பவர்களை எப்போதும் எதிர்பார்ப்பவர்களில்லை தமிழர்கள்… வந்தாரை வாழ வைப்பதுடன் சரி…’ என்று புரிந்து கொண்டதாலோ என்னவோ நம் தமிழக நட்சத்திரங்கள் மட்டும் வெள்ளம் வரட்டும், பஞ்சம் வரட்டும், லாக் டவுன் வரட்டும் கைகளையும் வாயையும் லாக் டவுன் பண்ணி அமைதியாகி விடுகிறார்கள்.

இருந்தாலும் நாம் அவர்களின் கட்டவுட்டுளுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருப்போம்… வாழ்க ஹீரோக்கள்..!